»   »  "அட பெட்டிய திறங்கப்பா..." சொன்னபடி டீசர் வெளியிடாத 'மகாநதி'யை கலாய்க்கும் ரசிகர்கள்!

"அட பெட்டிய திறங்கப்பா..." சொன்னபடி டீசர் வெளியிடாத 'மகாநதி'யை கலாய்க்கும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் 'மகாநதி'. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இந்தப் படம் தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் வெளியாகிறது.

சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா பத்திரிக்கை நிருபர் வேடத்தில் நடித்துள்ளார். துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நடிக்க, பிரகாஷ்ராஜ் ஒரு கதாசிரியராக நடிக்கிறார். நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இன்று டிசம்பர் 6-ம் தேதி நடிகை சாவித்ரியின் பிறந்தநாள் என்பதால், இன்று மாலை 3 மணியளவில் 'மகாநதி' படத்தின் டீசர் மற்றும் புதிய போஸ்டரை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நடிகையர் திலகம்

நடிகையர் திலகம்

சாவித்ரியின் வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யம் மட்டுமின்றி அவரது இறுதிகாலகட்டத்தின் சில சோகமான நிகழ்வுகளையும் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார்களாம். ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

சர்ப்ரைஸ்

டிசம்பர் 6-ம் தேதியான இன்று நடிகை சாவித்ரியின் பிறந்தநாள் என்பதால், இன்று மாலை 3 மணியளவில் 'மகாநதி' படத்தின் டீசர் மற்றும் புதிய போஸ்டரை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளியிடவில்லை

ஆனால், அறிவிக்கப்பட்டபடி 'மகாநதி' 'நடிகையர் திலகம்' படத்தின் பாக்ஸ் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் 'மகாநதி' படக்குழுவினரைக் கலாய்த்து வருகின்றனர். ஒழுங்கற்ற படக்குழுவினர் என ஒரு ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.

வேற நாட்டுலதான் திறப்பீங்களா

அநேகமா அவங்க பாக்ஸை வேற நாட்டுல ஓப்பன் பண்ணப் போறாங்கனு நினைக்கிறேன். ஏன்னா இப்பவே அவங்க சொன்ன நேரத்தை தாண்டி ரொம்ப நேரமாச்சு!

இன்னும் திறக்கலை

ஏன் இன்னும் பாக்ஸை திறக்காம வச்சிருக்காங்க... #Mahanati #NadigaiyarThilagam

ஒரு தகவலும் இல்லையே

ஏற்கெனவே மூணு மணி முடிஞ்சு போச்சு... 'மகாநதி' பத்தி இதுவரைக்கும் ஒரு தகவலும் வரலையே..!

எப்போ வரும்

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இப்படித்தான் இப்போ வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்..

ஸ்பெஷல் சர்ப்ரைஸ்

ஸ்பெஷல் சர்ப்ரைஸ் வரும். கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ் என வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனா, என்னப்பா ஒண்ணையு காணோம் என கடுப்பாகிறார்கள் ரசிகர்கள்.

English summary
The film 'Mahanati' is the story of the actress Savitri's life story. Today, December 6th, birthday of Savitri and it was officially announced that 3 PM to release Teaser and new poster of 'Mahanati'. But, as reported, the box of 'Mahanati' is not yet opened. The fans are trolling 'mahanati' team for this much late.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil