50ஐத் தொட்ட விஜய் சேதுபதி! தென்மேற்கு பருவக்காற்று முதல் மகாராஜா வரை க்ளியர் லிஸ்ட் இதோ!

By mohanraj

சென்னை: தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக பெரும் கனவோடு தனது திறமையை மட்டும் நம்பி சென்னை நோக்கி இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் ஏன் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் கூட வந்துள்ளனர். திறமையை சரியாக வெளிபடுத்தினால் தமிழ் சினிமா அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியுள்ளது. இதுமட்டும் இல்லாமல், அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராகக்கூட அமரவைத்து அழகு பார்த்துள்ளது தமிழ் சமூகம். இதற்கு எக்கச்சக்க எடுத்துக்காட்டுகளை நாம் வரிசைப் படுத்த முடியும்.

Maharaja Movie Vijay Sethupathi Maharaja

இந்த அளவிற்கு சினிமா மீது மோகம் கொண்ட தமிழ் ரசிகர்கள் பட்டாளம் அவ்வளவு எளிதில் ஒருவரை கொண்டாடிவிடாது. அப்படி ஒரு நடிகர் படத்தின் ஒரு காட்சியில் வந்து ரசிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்திவிட்டால் அவர்களை என்றைக்கும் கைவிடாது. அப்படி கனவுகளோடு சென்னையில் வளர்ந்த பையன் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டமாக இருந்தாலும், அவரது இளம் வயதிலேயே சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

Maharaja Movie Vijay Sethupathi Maharaja

விஜய் சேதுபதி 50: தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, அதற்கு முன்னர் சின்னச் சின்ன கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஆனால் தென்மேற்கு பருவக்காற்று படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதால், விஜய் சேதுபதி மீதும் ஊடக வெளிச்சம் பாய்ந்தது. அதன் பின்னர் அவர் நடித்த பீட்ஸா, சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் அவருக்கு ஹிட் கொடுக்க நன்கு அறியப்படும் நடிகராகவே மாறிப்போனார். ஒருகட்டத்திற்கு மேல் கதாநாயகன் மட்டும் இல்லாமல் பெரிய ஹீரோக்களின் வில்லன், கதையில் தாக்கத்தை ஏற்படுத்தும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். இதனால் ரசிகர்கள் அவரை மக்கள் செல்வன் என அன்போடு அழைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகின்றார். இந்நிலையில் இதுவரை விஜய் சேதுபதி 49 படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் 50வது படமாக மகாராஜா வெளியாகவுள்ளது. இந்த 50 படங்கள் எவையெவை, அவை எப்போது ரிலீஸ் ஆகியது என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.

Maharaja Movie Vijay Sethupathi Maharaja
  1. தென்மேற்கு பருவக்காற்று - 2010
  2. சுந்தர பாண்டியன் - 2012
  3. பீட்சா - 2012
  4. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - 2012
  5. சூது கவ்வும் - 2013
  6. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - 2013
  7. ரம்மி - 2014
  8. பண்ணையாரும் பத்மினியும் - 2014
  9. வன்மம் - 2014
  10. புறம்போக்கு எனும் பொதுவுடமை - 2015
  11. ஆரஞ்சு மிட்டாய் - 2015
  12. நானும் ரவுடிதான் - 2015
  13. சேதுபதி - 2016
  14. காதலும் கடந்து போகும் - 2016
  15. இறைவி - 2016
  16. தர்மதுரை - 2016
  17. ஆண்டவன் கட்டளை - 2016
  18. றெக்க - 2016
  19. கவன் - 2017
  20. விக்ரம் வேதா - 2017
  21. புரியாத புதிர் - 2017
  22. கருப்பன் - 2017
  23. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - 2018
  24. ஜுங்கா - 2018
  25. இமைக்கா நொடிகள் - 2018
  26. செக்கச் சிவந்த வானம் - 2018
  27. 96 - 2018
  28. சீதாகாதி - 2018
  29. பேட்டை - 2019
  30. சூப்பர் டீலக்ஸ் - 2019
  31. சிந்துபாத் - 2019
  32. ஷே ஷா நரசிம்மஹா ரெட்டி - 2019
  33. சங்கத் தமிழன் - 2019
  34. ஓ மை கடவுளே - 2020
  35. க/பெ ரணசிங்கம் - 2020
  36. மாஸ்டர் - 2021
  37. உப்பென - 2021
  38. லாபம் - 2021
  39. துக்லக் தர்பார் - 2021
  40. அன்பெல்லாவும் சேதுபதியும் - 2021
  41. கடைசி விவசாயி - 2022
  42. காத்துவாக்குல ரெண்டு காதல் - 2022
  43. விக்ரம் - 2022
  44. மாமனிதன் - 2022
  45. டி.எஸ்.பி - 2022
  46. விடுதலை - 2023
  47. யாதும் ஊரே யாவரும் கேளீர் - 2023
  48. ஜவான் - 2023
  49. மெர்ரி கிருஸ்துமஸ் - 2024
  50. மகாராஜா - 2024

மக்களை தனது அசாத்திய நடிப்பால் தொடர்ந்து மகிழ்வித்து வரும் விஜய் சேதுபதி சினிமா உலகில் உச்சம் தொட ஃபிலிமி ஃபீட் தமிழ் சார்பாக வாழ்த்துகள்.

Maharaja Movie Vijay Sethupathi Maharaja
Maharaja Movie Vijay Sethupathi Maharaja

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X