விஜய்சேதுபதி முதல்ல என்னை வேண்டாம்னு சொன்னாரு.. என்னோட ரியல் வயசு இதுதான்.. ’மகாராஜா’ மகள் பேட்டி!
சென்னை: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், சிங்கம்புலி, அருள்தாஸ், முனீஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் மகாராஜா திரைப்படம் படம் வெளியானது.
பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மகாராஜா படத்தை பார்க்க மக்கள் கூட்டம் திரையரங்குகளை நோக்கி குவிந்து வருகிறது. இந்த ஆண்டு முதல் பாதியில் வெளியான பல படங்கள் தோல்வியைத் தழுவின. பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சொதப்பியது.

இந்நிலையில் அவருக்கு மகாராஜா திரைப்படம் கம்பேக் திரைப்படமாக மாறியுள்ளது. அந்த படத்தில் அவருக்கு மகளாக நடித்த இளம் நடிகை சச்சனா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மகாராஜா படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி வேணான்னு சொல்லிட்டார்: ஜோதி எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் சச்சனா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சச்சனா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பல பேருடன் போட்டி போட்டு ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் நடத்தி கடைசியில் தேர்வாகி உள்ளார். நானும் இன்னொரு பெண்ணும் இறுதியாக தேர்வான நிலையில், என்னை வேண்டாம்னு முதலில் விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், இயக்குநர் நித்திலன் சார் தான் நான் நடிச்சா சரியாக இருக்கும் என்றார். அதன் பின்னர் ஷூட்டிங் சென்றுக் கொண்டிருந்த போது ஒரு வார காலத்தில் இயக்குநரிடம் சென்று உங்க சாய்ஸ் சரியாக உள்ளது என விஜய் சேதுபதி அப்பா கூறினார் என சச்சனா தெரிவித்துள்ளார்.
என்னோட ரியல் வயது: மகாராஜா திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்த சச்சனா குழந்தை நட்சத்திரம் என பலரும் நினைத்த நிலையில், தனது வயது 21 என அந்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். ஷூட்டிங் நடக்கும் போது கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன், அப்போது என் வயது 18 அப்பவே செட்டில் யாருமே என்னை நம்பவில்லை. எல்லாம் ஸ்கூல் பொண்ணுன்னே நினைச்சாங்க என்றார்.

கையே உடைஞ்சிடுச்சு: ஷூட்டிங்கின் போது கீழே விழுந்ததில் நிஜமாகவே என் கை உடைஞ்சிடுச்சு அப்படியெல்லாம் ரத்தம் சிந்தி கஷ்டப்பட்டுத்தான் நடிச்சேன் என மகாராஜா படத்தில் நடித்த பல அனுபவங்களையும் நடிகர் விஜய் சேதுபதி அப்பா என்று தான் அழைக்கிறேன் என்று பாசமாகவும் நடிக்கும் போது எனக்கு பல விஷயங்களை கற்றுகொடுத்து உதவினார் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











