என்னை கிளாமராக உடைகள் அணியச் சொன்ன இயக்குநர்.. மகாராஜா பட நடிகை பேச்சு!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்தில் நடித்திருப்பவர் நடிகை மம்தா மோகன்தாஸ். ஆனால் இவர் நடிகையாக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆவதற்கு முன்னரே பிலிம் பேர் விருது வெல்லும் அளவிற்கு சிறந்த பாடகியாக இருந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ராக்கி என்ற படத்தில் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் இவர் பாடிய பாடலுக்காக அந்த ஆண்டுக்கான சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருது இவருக்கு வழங்கப்பட்டது. பாடகியாக இருந்து நடிகையான பின்னர் கேரள மாநில அரசு விருது, சிறந்த நடிகைக்கான விருது போன்ற விருதுகளையும் தனது நடிப்பின் மூலம் பெற்றுள்ளார் நடிகை மம்தா மோகன்தாஸ்.
2007 ஆம் ஆண்டு எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடித்த எமதொங்கா என்ற படத்தில் துணை கதாநாயகியாக தெலுங்கு பட உலகிற்கு அறிமுகமானார் மம்தா மோகன்தாஸ். ஆனால் அதற்கு முன்னரே 2005ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த "மயக்கம்" என்ற படத்தில் மூலம் மலையாளத்தில் அறிமுகமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி நடிகை மற்றும் பாடகி என ரொம்பவும் பிசியாக தென்னிந்திய மொழிகளில் ரொம்பவும் பிசியாகவே இவர் வலம் வந்தார். இடையில் சில காலம் இவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருந்துவிட்டு, தற்போது மீண்டும் நடிப்பதற்காக வந்துள்ளார்.

மம்தா பேட்டி: நடிகை அபிராமியும் மம்தா மோகன்தாஸும் அளித்திருந்த பேட்டி இணையத்தில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. இதில் இவர் மற்ற ஊடகங்களுக்கும் பேட்டி அளித்து வருகின்றார். அதில் இவர் பேசியது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. எனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் இயக்குநர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றிக் கொண்டிருந்தேன். நானாக புதிதாக எதையும் யோசித்து செயல்படாத காலகட்டம் அது. சில நேரங்களில் நாம் என்ன செய்கிறோம் என்பதை என்னை நோக்கி நானே கேள்வி எழுப்பிக் கொள்ளும் சூழல்களும் கூட ஒரு சில நேரங்களில் நடைபெற்றுள்ளது.

கிளாமர் டிரஸ்: 2007 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜமௌலி படத்தில் நடிக்கும் போது எனக்கு மிகவும் கிளாமரான ஆடைகளை கொடுத்து என்னை நடிக்கச் சொல்லி இருந்தார். மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அந்த செட்டில் கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல் இருந்தனர். ராஜமௌலி அப்படி கூறியது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு தெரியும்தான், ஆனால் நான் சினிமாவுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

ராஜமௌலி திட்டுவார்: ராஜமௌலி மிகவும் சீரியஸான இயக்குநர். சில நேரங்களில் நடிகர்கள் மீது அவர் கோபப்படவும் செய்வார். ராஜமௌலியிடம் நான் திட்டு வாங்கி இருக்கின்றேன். இப்படியான சூழலில் இருக்கும் போது, ராஜமௌலியின் மனைவி என்னிடம் வந்து மம்தா, ராஜமௌலி அவ்வாறு கூறுவதற்கு காரணம் அந்த கதாப்பாத்திரம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான், மற்றபடி அவன் (ராஜமௌலி) மனதில் இருந்து வருபவை அல்ல. அவன் ஒரு சினிமா பைத்தியம் எனக் கூறி என்னை தேற்றினார். நானும் சரிங்க ஆண்டி எனக்கூறி என்னை தேற்றிக் கொண்டு நடிக்கச் சென்று விடுவேன் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











