புதிய கார் வாங்கிய சாச்சனா.. விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'மகாராஜா' படத்தின் மூலம் பிரபலமானவர் சாச்சனா புதிதாக கார் வாங்கி இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அவருக்கு பாலும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
'மகாராஜா' படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலமான சாச்சனாவின் யதார்த்தமான நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது. குழந்தை நட்சத்திரமாக நடித்ததால், அவரை பலரும் பள்ளிச் செல்லும் குழந்தையாகவே கருதினர். ஆனால், உண்மையில் சாச்சனாவிற்கு 21 வயது ஆகிறது. இவர், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடிப்பதற்கு முன்னரே ஆகஸ்ட் 16, 1947 என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிகை சாச்சனா: இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாச்சனா, ஒரே நாளில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி பின் மீண்டும் வீட்டிற்குள் சென்றார். அதன்பின், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும், திரைப்பட உலகில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
புதிய கார்: இந்நிலையில், நடிகை சாச்சனா தனது இன்ஸ்டாகிராமில் புதிதாக கார் வாங்கி இருக்கும் மகிழ்ச்சியான தகவலை பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற NEXA ரக காரை குடும்பத்தோடு சென்று வாங்கி உள்ளார். இதன் விலை 12 முதல் 14 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











