மகாராஜா பட வில்லன் நடிகர் மகளுக்கு திருமணம்.. களைகட்டிய ஹல்தி நிகழ்வு.. இறுக்கமாக கட்டிக்கொண்ட ஜோடி!
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பாலிவுட்டில் பன்முகம் காட்டி வருபவர் அனுராக் காஷ்யப். இவர் அடுத்தடுத்த மொழிப் படங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தார்.
சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 150 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்து வருகிறது. முன்னதாக 110 கோடி ரூபாய்களை வசூலித்திருந்த இந்தப்படம் தற்போது சீன மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் அனுராக் காஷ்யப்: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பாலிவுட்டில் பல ஆண்டுகளாக பயணித்து வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் பயணித்து வருகிறார். நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். இந்தப் படம் இவருக்கு தமிழில் மிகச்சிறப்பான அறிமுகத்தை கொடுத்த நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50வது படமாக சமீபத்தில் வெளியான மகாராஜா படத்திலும் வில்லனாக நடித்து மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார். இந்தப்படம் சர்வதேச அளவில் 150 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளது. தற்போது சீனாவில் வெளியிடப்பட்டு மிகப்பெரிய அளவில் கல்லா கட்டி வருகிறது.

அனுராக் காஷ்யப் மகள் திருமணம்: அனுராக் காஷ்யப்பின் மகள், ஆலியா காஷ்யப் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஷேன் கிரிகோயரை வரும் 11ம் தேதி திருமணம் செய்யவுள்ளார். இதன் அடுத்தடுத்த நிகழ்வுகள் தற்போது களைகட்டி வருகின்றன. கடந்த ஆண்டில் இவர்களது நிச்சயதார்த்தம் பாலியில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் தற்போது இந்த ஜோடி திருமணத்திற்கு தயாராகியுள்ளது. மும்பையில் உள்ள பாம்பே கிளப்பில் இந்த திருமணம் நடக்கவுள்ளது. நேற்றைய தினம் இதன் பேச்சுலர் பார்ட்டி நடந்த நிலையில் இதில் அனுராக் காஷ்யப் மற்றும் அவரது மனைவியும் கலந்துக் கொண்டனர்.
ஆலியா -ஷேன் ஜோடியின் ஹல்தி: பிங்க் நிற தீமில் இந்த பார்ட்டி நடந்த நிலையில் இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் கலந்துக் கொண்டு, அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் மணமகள் வெள்ளை நிற உடையில் அனைவரையும் கவர்ந்திருந்தார். இதனிடையே இன்று காலை இந்த திருமணத்தில் ஹல்தி நிகழ்வு களைகட்டியது. இதன் புகைப்படத்தை அனுராக் காஷ்யப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதில் மணமக்கள் மஞ்சள் நிற உடையில் மிகச்சிறப்பாக காணப்பட்டனர். கொண்டாட்டங்களுடன் நடைபெற்ற இந்த ஹல்தி நிகழ்ச்சியில் மணமகளை மணமகன் இறுக்கமாக கட்டிக் கொண்டபடி காணப்பட்டார்.

அனுராக் காஷ்யப் நெகிழ்ச்சி: மும்பையில் மிகவும் ஆடம்பரமாக நடக்கவுள்ள இந்த திருமணத்தில் பல திரைத்துறை பிரபலங்களும் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக மகளின் திருமணம் நடக்கவுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தன்னுடைய இனஸ்டாகிராமில் குறிப்பிட்ட அனுராக் காஷ்யப், திருமணத்திற்கு முன்பு தன்னுடைய மகளுடன் இணைந்து தான் படம் பார்க்க சென்றது குறித்தும் பேசியிருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து அபிஷேக் பச்சனின் ஐ வாண்ட் டூ டாக் படத்தை பார்த்ததாக குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











