twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்தின் அந்த போட்டோவை அழித்துவிடுங்கள்.. இல்லையெனில் நடவடிக்கை பாயும்.. போலீஸ் வார்னிங்!

    |

    சென்னை: சமூக வலைதளங்களில் பரவும் சுஷாந்த் மரணித்திருக்கும் போட்டோவை உடனடியாக டெலிட் செய்யுமாறு மகாராஷ்டிரா போலீஸ் எச்சரித்துள்ளனர்.

    பாலிவுட்டின் இளம் நடிகரான சுஷாந்த் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டின் அரையில் சடலமாக அவரது உடல் மீட்கப்பட்டது.

    அவரது உடலை கைப்பற்றிய போலீசார் அவரது மரணம் கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றே அவர் மரணித்திருக்கும் போட்டோ வைரலானது.

    ரஜினி பட நடிகை கடற்கரையில் மேல் சாட்டை இல்லாமல் காத்து வாங்கும் போட்டோ வைரலாகி வருகிறது..ரஜினி பட நடிகை கடற்கரையில் மேல் சாட்டை இல்லாமல் காத்து வாங்கும் போட்டோ வைரலாகி வருகிறது..

    கடும் கண்டனம்

    கடும் கண்டனம்

    கழுத்தில் கயிறுடன் படுக்கையில் சுஷாந்த் அசைவற்று கிடந்தார். பார்க்கும் போதே கலங்க வைக்கும் அந்த போட்டோவை பார்த்த திரைத்துறை பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவத்தனர். இந்த போட்டோவை ஷேர் செய்ய உங்களுக்கு எப்படி மனசு இடம் கொடுக்கிறது என்றும் விளாசினர்.

    போலீசார் எச்சரிக்கை

    போலீசார் எச்சரிக்கை

    மேலும் இறந்தவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மரியாதை அளிக்கும் வகையில் அவர் மரணித்துக் கிடக்கும் இந்த போட்டோவை ஷேர் செய்வதை தவிருங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அந்த போட்டோ பகிரப்படுவதற்கு போலீசாரும் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

    கவலைக்குரியது

    கவலைக்குரியது

    இதுதொடர்பாக மகாராஷ்டிரா போலீசார் வரிசையாக டிவிட்டியுள்ளனர். அதில் ஞாயிற்றுக்கிழமை தனது மும்பை வீட்டில் இறந்து கிடந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சில படங்கள் ஆன்லைனில் பரப்பப்படுவது "கவலைக்குரியது மற்றும் மோசமான ரசனை கொண்டது" என்று தெரிவித்துள்ளது.

    நீக்கப்பட வேண்டும்

    நீக்கப்பட வேண்டும்

    இதுபோன்ற பதிவுகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவை, மேலும் அந்த பதிவுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். மற்றொரு டிவிட்டில் இதுபோன்ற படங்கள் புழக்கத்தில் இருப்பது சட்ட வழிகாட்டுதல்களுக்கும் நீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது என்பது வலியுறுத்தப்படுகிறது, மேலும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக பொறுப்பாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநில காவல்துறை

    மாநில காவல்துறை

    மற்றொரு டிவிட்டில் "மகாராஷ்டிரா சைபர் க்ரைம் மேற்கண்ட படங்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து நெட்டிசன்களையும் அறிவுறுத்துகிறது. ஏற்கனவே பரப்பப்பட்ட படங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

    English summary
    Maharashtra police warns Netizens should delete Sushant Singh Rajput's last photo. Some netizens shares his last photo which he lays on bed without breath.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X