தனுஸ்ரீ தத்தா விவகாரம்... நானா படேகருக்கு முற்றுகிறது நெருக்கடி!

தனுஸ்ரீ தத்தா கூறிய புகார் குறித்து விளக்கம் கேட்டு, நடிகர் நானா படேகருக்கு மஹாராஷ்ட்ரா மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது

சென்னை: தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு, நடிகர் நானா படேகருக்கு மஹாராஷ்ட்ரா மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் பொம்மலாட்டம், காலா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நானா படேகர். இந்தி சினிமாவில் பெரும் ஜாம்பவானாக கருதப்படும் இவர் மீது, தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார்.

Maharashtra women’s commission notice to Nanag patekar

கடந்த 2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, நானா படேகர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், நானா படேகர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து நானா படேகர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர் ரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் தனுஸ்ரீ தத்தாவின் புகார் குறித்து விளக்கம் கேட்டு நானா படேகருக்கு நோட்டீஸ் அனுப்ப மஹாராஷ்ட்ரா மாநில மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிகிறது.

பாலியல் புகாருக்கு ஆளான நானா படேகருக்கு நெருக்கடி முற்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X