Maharastra Elections 2024: எவ்வளவு பொறுப்பு பாருங்க.. வாக்களிக்க குவியும் பாலிவுட் நட்சத்திரங்கள்!

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் இன்று அதாவது நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்றுவருகின்றது. மொத்தம் 288 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்திற்கு ஒரே கட்டமான தேர்தல் நடைபெற்று வருகின்றது. பொது மக்கள் தொடங்கி, அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் காலையில் இருந்தே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இப்படியான நிலையில் வாக்களிக்க வந்த சினிமா பிரபலங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தினைப் பொறுத்தவரையில் இந்தியாவின் இதயம் என்று குறிப்பிடலாம். நாட்டின் பாராளுமன்ற அமைந்துள்ள புது டெல்லி நாட்டின் மூளை என்றால், ஸ்டாக் மார்க்கெட், லட்சக்கணக்கான கோடிகளை ஒரே நாளில் சர்வசாதாரணமாக கையாளும் மும்பையை நாட்டின் இதயம் எனக் கூறுவதில் தவறு எதுவும் இருக்காது. மகாராஷ்ட்ராவைப் பொறுத்தவரையில், மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில் ஆட்சி அமைக்க 145 இடங்களை வெல்ல வேண்டும்.மாநிலம் முழுவதும் மொத்தம் 9 கோடியே 63 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் களத்தில் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், லெட்டர் பேட் கட்சிகள் என மொத்தம் 158 கட்சிகள் உள்ளது. இவை இல்லாமல், சுயேட்சை வேட்பாளர்களும் உள்ளனர். மொத்தம் 4 ஆயிரத்து 136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

maharastra maharastra elections 2024 mumbai elections 2024 2024

இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு மிக அமைதியாக நடைபெற்று வருகின்றது. பதட்டமான வாக்குச் சாவடிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்த மத்திய ரிசர்வ் படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது. மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் வருகின்ற தேர்தல் என்பதால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

பிரபலங்கள்: இந்நிலையில் காலையில் இருந்து நடைபெற்றுவரும் வாக்குப்பதிவில் பாலிவுட் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக, அக்‌ஷய் குமார், கார்த்திக் ஆர்யன், இசையமைப்பாளர் விஷால் தத்லானி, நடிகை ஊர்மிளா மடோன்கர், நடிகர் ராஜ்குமார் ராவ், சோனு சூட், கபீர் கான், கௌதமி கபூர், சுனில் ஷெட்டி, ஜெனிலியா, ஹேம மாலினி, அனுபம் கெர், நடிகை ராஷிகண்ணா உள்ளிட்ட பலரும் வாக்களித்துள்ளனர்.

maharastra maharastra elections 2024 mumbai elections 2024 2024

வித்தியாசம்: மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் இன்னும் பிரபலங்கள் வாக்களிக்க வருவார்கள். இதனால் பிரபலங்கள் வாக்களிக்க வரும் வாக்குச் சாவடிகளில் மக்கள் கூட்டத்தினைக் கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்களித்த பிரபலங்கள் அனைவரும், பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு வாக்கும் பெரும் வித்தியாசத்தினை ஏற்படுத்தும், எனவே அனைவரும் தவராமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

maharastra maharastra elections 2024 mumbai elections 2024 2024

வீடியோ: நடிகர் அனுபம் கெர் ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்ன் கொண்டார். இது தொடர்பாக வாக்களித்தப் பின்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதேபோல் நடிகை ஜெனிலியா தனது கணவருடன் வந்து வாக்களித்தார். அதன் பின்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளார். பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வாக்களித்த பின்னர் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

maharastra maharastra elections 2024 mumbai elections 2024 2024

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X