14ம் தேதி ரிலீஸ்... ட்ரெண்டான மகாசமுத்திரம் ரிலீஸ் ட்ரெயிலர்!
சென்னை : நடிகர் சர்வானந்த், சித்தார்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 14ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ள படம் மகாசமுத்திரம்.
இந்தப் படத்தின் ரிலீஸ் ட்ரெயிலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
மிரட்டலான இந்த ட்ரெயிலர் யூடியூப்பில் தற்போது முதலிடத்தில் ட்ரெண்டாகி உள்ளது.

மகாசமுத்திரம் படம்
நடிகர் சர்வானந்த் டோலிவுட்டில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். தமிழிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் வரும் 14ம் தேதி மகாசமுத்திரம் என்ற படம் ரிலீசாக உள்ளது. படத்தில் அவருடன் இணைந்து நடிகர் சித்தார்த்தும் மிரட்டியுள்ளார்.

ரிலீஸ் ட்ரெயிலர் வெளியீடு
படத்தில் இவர்களுடன் அதிதி ராவ் மற்றும் அனு இம்மானுவேல் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தை அஜய் பூபதி இயக்கியுள்ளார். படத்தின் ரிலீசையொட்டி இரு தினங்களுக்கு முன்பு ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.

மிரட்டலான ட்ரெயிலர்
சர்வானந்த் மற்றும் சித்தார்த் இருவருக்கும் படத்தில் இணையான கதாபாத்திரம் இருப்பதை இந்த ட்ரெயிலர் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இவர்களுக்கு இடையிலான மோதல் காட்சிகள் ட்ரெயிலரில் மிரட்டுகிறது. அதிதி ராவ் படத்தில் யாருக்கு ஜோடி என்பதிலும் குழப்பம் ஏற்படுகிறது.

அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு
அனு இம்மானுவேல் படத்தில் எந்த கேரக்டரில் வருகிறார் என்பது குறித்து யூகிக்க முடியவில்லை. படம் உலகளவில் இன்னும் இரு தினங்களில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் இந்த ட்ரெயிலர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

காதலை மையமாக கொண்ட கதை
காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் கவனமுடன் கையாண்டுள்ளது படத்தின் ட்ரெயிலர் மூலம் நமக்கு தெரியவருகிறது. கடந்த மாதத்தில் இந்தப் படத்தின் பாடலை அதிதி ராவ் வெளியிட்டார். இந்தப் பாடலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முதலிடத்தில் ரிலீஸ் ட்ரெயிலர்
இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் ட்ரெயிலர் தற்போது யூடியூப்பில் முதலிடத்தில் ட்ரெண்டிங்ல் உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களிடையே இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











