யாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்: சிம்பு அப்படி என்ன செய்தார்?
Recommended Video

சென்னை: பிக் பாஸ் பிரபலங்களிலேயே மகத்தின் வாழ்க்கை தான் ஜம்முன்னு போய்க் கொண்டிருக்கிறது.
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த மகத் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பிரபலமாகிவிட்டார். பிக் பாஸ் வீட்டில் மகத் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தது பார்வையாளர்களுக்கு பிடிக்காவிட்டாலும் அவர் மீது பாவப்பட்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கோலிவுட்டில் மகத்துக்கு மவுசு அதிகரித்துவிட்டது.
மகத்
பிரபு ராம் இயக்கத்தில் மகத், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ரொமான்டிக் காமெடி படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து இன்று அந்த படத்தின் வேலை பூஜையுடன் துவங்கியது. பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் படத்தில் ஜோடி சேர்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்படம்
முன்னதாக கடந்த 28ம் தேதி தான் மகத், யாஷிகா நடிக்கும் படத்தின் பூஜை நடந்தது. ஹாரர் த்ரில்லர் படமான அதை மகேஷ்-வெங்கடேஷ் ஆகியோர் இயக்குகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது காதலில் விழுந்த அவர்கள் ஜோடி சேர்ந்து நடிப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

பிரபலங்கள்
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்தவர்களிலேயே மகத்திற்கு தான் கெரியர் சூப்பராக பிக்கப்பாகியுள்ளது. அடுத்தடுத்த படங்களில் அதுவும் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே பிக் பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகா பா. ரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
சிம்பு
மகத் சோலோ ஹீரோவாக மட்டும் அல்ல தனது நண்பர் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும் நடித்துள்ளார். தான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதற்கு காரணம் சிம்பு என்றார் மகத். தற்போதும் அவர் கெரியர் பிக்கப்பாக சிம்பு அறிவுரை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











