»   »  துபாயில் வசிக்கும் தொழில் அதிபரை காதலிக்கும் மங்காத்தா நடிகர்?

துபாயில் வசிக்கும் தொழில் அதிபரை காதலிக்கும் மங்காத்தா நடிகர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மகத் நடிகையும், தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவை காதலிப்பதாக கூறப்படுகிறது.

அஜீத்தின் மங்காத்தா படம் மூலம் பிரபலமானவர் நடிகர் மகத் ராகவேந்திரா. ஜில்லா படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்தார் மகத். சிம்புவின் அஅஅ படத்தை எதிர்பார்த்தார்.

அவர் இன்னும் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார்.

பிராச்சி

பிராச்சி

மகத் நடிகையும், தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவை காதலிப்பதாக கூறப்படுகிறது. 2012ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் அழகிப் பட்டத்தை வென்றவர் பிராச்சி.

மிஸ்ரா

மிஸ்ரா

மகத்தும், பிராச்சியும் ஓராண்டு காலமாக காதலித்துக் கொண்டிருக்கிறார்களாம். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் இருவரும் சந்தித்தார்களாம்.

பழக்கம்

பழக்கம்

துபாயில் பார்த்த உடன் மகத்தும், பிராச்சியும் நண்பர்களாகிவிட்டார்களாம். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியதாம். பிராச்சி துபாயில் வசித்து வருகிறார். மகத் ஷூட்டிங் இல்லாதபோது துபாயில் இருக்கும் தனது குடும்பத்தாருடன் நேரம் செலவிடுகிறாராம்.

சுற்றுலா

சுற்றுலா

தூரமாக இருந்தாலும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது என்று மகத்தும், பிராச்சியும் முடிவு செய்துள்ளார்களாம். அவர்கள் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டு வந்தார்களாம்.

English summary
Buzz is that actor Mahat Raghavendra is in love with actress cum business woman Prachi Mishra. The love brids recently went to Australia for a short vacation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X