ஆண் குழந்தைக்கு அப்பாவானார் மகத்... பிக் பாஸ் பிரபலங்கள் வாழ்த்து !

சென்னை : பிக் பாஸ் பிரபலம் மகத் பிராச்சி தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் மகத்.

இந்த தம்பதிக்கு ரசிகர்கள் , நெருங்கி நண்பர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துணை கதாபாத்திரத்தில்

துணை கதாபாத்திரத்தில்

சிம்பு நடித்த வல்லவன் திரைப்படத்தில் சிம்புவின் நண்பனாக நடித்து திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார் மகத். அந்த படத்தைத் தொடர்ந்து மங்காத்தா, ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன்,காளை போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

வெளியேற்றப்பட்டார்

வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், கலந்து கொண்டனர். யாஷிகாவின் பின்னால் சுற்றி கெட்டபெயர் எடுத்தார். மேலும், மும்தாஜிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதால் அந்த வீட்லிருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பாதியில் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்லிருந்து வெளியேறிய மகத் , கேட்டவன் பேர் எடுத்த நல்லவன்டா, இவன் உத்தமன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அப்பாவாக போகிறேன்

அப்பாவாக போகிறேன்

காதலி பிராச்சியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட மகத், நான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியான செய்தியை இணையத்தில் தெரிவித்திருந்தார். மேலும், வளைகாப்பு புகைப்படத்தையும் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

Recommended Video

வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம் போடும் பிரபலங்கள் | Dance with Baby Bump | Filmibeat Tamil
ஆண் குழந்தை பிறந்தது

ஆண் குழந்தை பிறந்தது

இந்நிலையில் நடிகர் மகத், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிக் பாஸ் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X