தேதி குறிச்சாச்சாமே..? நடிகர் மகத்- மிஸ். இந்தியா பிராச்சி மிஸ்ரா காதல் திருமணம் எப்போது?
சென்னை: நடிகர் மகத்- பிராச்சி மிஸ்ரா காதல் திருமணம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடக்க இருக்கிறது.
சிம்புவின் வல்லவன், காளை படங்களில் சிறு வேடங்களில் நடித்த மகத், அஜித்தின் 'மங்காத்தா' முக்கிய கேரக்டரில் நடித்தார்.
பிறகு பிரியாணி, வடகறி, சென்னை 28 இரண்டாம் பாகம், அன்பானவன் அடங்காதன் அசராதவன், வந்தா ராஜாவாத்தான் வருவேன் உட்பட சில படங்களில் நடித்தார்.

பிராச்சி மிஸ்ரா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த்துடன் காதல் வரை சென்றார். இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ராவை நடிகர் மகத் காதலித்து வந்தார்.

நிச்சயதார்த்தம்
துபாயில் நடந்த விழா ஒன்றில் சந்தித்துக் கொண்ட இவர்கள், நண்பர்களாகி பின் காதலர்கள் ஆனார்கள். இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமண தேதி
இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். திருமண தேதி அப்போது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இவர்கள் திருமணம் எப்போது என்று தெரியவந்துள்ளது.

2 நாள் விழா
அடுத்த மாதம், முதல் வாரத்தில் இவர்கள் திருமணம் நடக்கிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த விழாவில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











