மங்காத்தா மகத் தன் மகனுக்கு என்ன பெயர் வச்சிருக்காரு தெரியுமா? வைரலாகும் க்யூட் பேபி போட்டோஸ்!
சென்னை: நடிகர் மகத் ராகவேந்திரா தன்னுடைய மகனுக்கு பெயர் சூட்டி உள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மகத் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
கடந்த ஆண்டு மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்ட மகத்துக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மங்காத்தா மகத்
சிம்புவின் வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மகத். ஆனால், தல அஜித்தின் மங்காத்தா படம் தான் நடிகர் மகத்துக்கு மிகப்பெரிய அடையாளத்தை தமிழ் சினிமாவில் தந்தது. தல அஜித்தையே ஏமாற்றி பணத்தை ஆட்டையைப் போட்டு ராய் லக்ஷ்மியுடன் பல்லேலக்கா பாடலுக்கு நடனமாடி இருப்பார்.

சிம்புவின் நண்பர்
நடிகர் சிலம்பரசனின் நெருங்கிய நண்பர் மகத். வல்லவன், காளை, அன்பானவன் அசறாதவன் அடங்காதவன், வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார். பிரேம்ஜிக்கும் இவர் நண்பர் என்பதால், வெங்கட் பிரபு படங்களில் இடம்பெற்றுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2
விஜய் டிவியின் டிஆர்பி கிங் நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட மகத் 70 நாள் வரை தாக்குப்பிடித்து விட்டு பின்னர் வெளியேறினார். யாஷிகா ஆனந்த் உடன் மிகவும் நெருக்கமாக பழக மகத்துக்கு பிக் பாஸ் மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. இருவரும் இணைந்து நடித்துள்ள இவன் தான் உத்தமன் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

மாடல் அழகியுடன் திருமணம்
2012ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் பட்டம் வென்ற மாடல் அழகி பிராச்சி மிஸ்ராவை காதலித்து வந்த நடிகர் மகத் கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இருவருக்கும் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு பெயர் வைத்து உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார் மகத்.

என்ன பெயர்
நடிகர் மகத் தனது செல்ல மகனுக்கு அதியமான் ராகவேந்திரா எனும் பெயரை சூட்டி உள்ளார். குழந்தை மற்றும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு இந்த அறிவிப்பை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் மகத்.
Recommended Video

அதியமானுக்கு வாழ்த்து
தந்தையர் தினத்தன்று தனது மகனின் பெயரை வெளியிட்டுள்ள நடிகர் மகத்துக்கும் குழந்தை அதியமான் ராகவேந்திராவுக்கும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெயர் அழகாக உள்ளது என்றும் மகத்தை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











