லிஃப்ட்டில் கசமுசா: வைரலாகும் மகத்தின் லிப் டூ லிப் முத்த புகைப்படம்
Recommended Video

சென்னை: மகத் பியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த காட்சி தற்போது வைரலாகியுள்ளது.
சிம்புவின் நண்பரான மகத் பிக் பாஸ் 2 வீட்டில் அட்டகாசம் செய்துவிட்டு சென்றார். வெளியே காதலி இருக்கும்போதே பிக் பாஸ் வீட்டில் தங்கியபோது யாஷிகாவை காதலித்தார்.
அவரும், யாஷிகாவும் சேர்ந்து அடித்த லூட்டியை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

மகத்
ஒரே வீட்டில் இப்படி தங்கினால் ஈர்ப்பு ஏற்படத் தான் செய்யும் என்று யாஷிகா மீது காதலில் விழுந்ததற்கு விளக்கம் அளித்தார் மகத். பிக் பாஸ் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட குடுமிபிடி சண்டை போட்ட நேரத்தில் கூட அவர் யாஷிகாவை கூலாக கட்டிப்பிடித்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. அவர்கள் கட்டிப்பிடித்ததை பார்த்து சில போட்டியாளர்கள் கடுப்பானதும் உண்டு.

சிம்பு
ஒரு பக்கம் காதல் என்ற பெயரில் யாஷிகாவுடன் சேர்ந்து கும்மாளம் போட்டார். மறு பக்கம் தோழி என்ற பெயரில் அந்த கோபக்கார பெண் ஐஸ்வர்யா சொல்வதை கேட்டு அவரை போன்றே பேயாட்டம் ஆடினார். மகத் அடித்த லூட்டிகளை எல்லாம் பார்த்த பார்வையாளர்கள் சிம்பு நண்பன் அவரை போன்று தானே இருப்பார் என்றனர். சிம்பு திருந்திவிட்ட நேரத்தில் மகத்தால் விமர்சனத்திற்குள்ளானார்.

பியா பாஜ்பாய்
மகத், பியா பாஜ்பாயுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு படம் பேக் பெஞ்ச் ஸ்டூடண்ட். 2013ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான அந்த படத்தில் மகத், பியாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்திருப்பார். அந்த முத்த புகைப்படம் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. மகத் அப்பவே அப்படி, இப்போ சொல்லவா வேண்டும் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

சமாதானம்
மகத் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டதை பார்த்து காதலை முறித்துக் கொண்ட பிராச்சியை சமாதானம் செய்து தற்போது தான் எல்லாம் நல்ல படியாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த புகைப்படம் வைராலகியுள்ளது. யாஷிகா விஷயத்தையே மன்னித்த பிராச்சி இந்த ரீல் முத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











