மகத் மனைவிக்கு வளைகாப்பு.. வெள்ளை நிற பட்டில் கலக்கலாய் பிராச்சி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
சென்னை: நடிகர் மகத் மனைவியின் வளையகாப்பு போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'மங்காத்தா', 'ஜில்லா', 'வந்தா ராஜாவா தான் வருவேன்' போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் மகத்.
சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சர்ச்சைகளில் சிக்கிய மகத்
இதில் சக போட்டியாளரான யாஷிகாவுடன் நெருக்கமாக இருப்பது, மூத்த போட்டியாளர்களிடம் மரியாதை இன்றி நடந்து கொள்வது என பல சர்ச்சைகளில் சிக்கினார். பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவை காதலித்ததார் மகத்.

மகத்துக்கு ரெட் கார்டு
இதனால் வெளியே இருந்த அவரது காதலியான மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா மகத்துடனான காதலை முறித்துக் கொள்வதாக கூறினார். பின்னர் மும்தாஜிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் மகத்.

கடந்த ஆண்டு திருமணம்
வெளியே வந்த பிறகு தனது காதலியை சமாதானப்படுத்திய மகத், அவருடன் மீண்டும் காதலை தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

மகத்துக்கு வாழ்த்து
இந்நிலையில் தனது மனைவி பிராச்சி கர்ப்பமாக இருப்பதாக நடிகர் மகத் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

பிராச்சிக்கு வளைகாப்பு
இந்நிலையில் நடிகர் மகத்தின் மனைவிக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இந்த போட்டோக்களை பிராச்சி தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் வெள்ளை பட்டு பச்சை நிற ப்ளவுஸ் என செம கலக்கலாக உள்ளார் பிராச்சி.
Recommended Video

குடும்பத்தினர் பங்கேற்கவில்லை
தனது வளைகாப்பு தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிராச்சி, வளைகாப்பு ரொம்பவே எளிமையாக நடைபெற்றதாக கூறியுள்ளார். தன்னுடைய குடும்பத்தினர் உத்தரப்பிரதேசத்தில் உள்ளதாகவும் தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக அவர்களால் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மாமியார் செய்த ஏற்பாடு
மேலும் தன்னுடைய மாமியார் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததாகவும், சிறிய செர்மனியாக இருந்தாலும் அழகானதாய் இருந்தது என்றும் தனது மாமியார் அனைத்து சடங்குகளையும் செய்ததாக கூறியுள்ளார்.

லட்டுகளை சாப்பிட்டு
தென்னிந்திய உணவுகள் மற்றும் இனிப்பு வகைகள் இதில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ள பிராச்சி, இந்த விசேஷத்தை தான் என்ஜாய் செய்ததாகவும் மகத் மற்றும் தங்களின செல்ல நாயான கொகொவும் அனைத்து லட்டுகளையும் சாப்பிட்டு கொண்டாடியதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











