Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதிய படத்தில் ஜோடி சேரும் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள்.. யாருனு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
பிக் பாஸ் வீட்டைத் தொடர்ந்து சினிமாவிலும் டூயட் பாட இருக்கின்றனர் மஹத்தும், யாஷிகா ஆனந்தும்.
Recommended Video
சென்னை: புதிய படமொன்றில் யாஷிகா ஆனந்தையும், மஹத்தையும் ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் நல்ல பெயருடனோ அல்லது கெட்ட பெயருடனோ, எப்படியாவது பிரபலமாகி விடுகின்றனர். நிச்சயம் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து விடுகின்றன.
அந்தவகையில் முதல் சீசன் போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாணும், ரைசாவும் பியார் பிரேமா காதல் படத்தில் சேர்ந்து நடித்தனர்.
இஸ்பேட் ராஜாவும், இதயராணியும்:
இப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இருவரும் தற்போது பிஸியாகி விட்டனர். ஹரிஷ் தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் நடித்து வருகிறார்.
காதல்:
இந்நிலையில், ஹரீஷ்-ரைசாவைத் தொடர்ந்து, புதிய படத்தில் மஹத்தையும், யாஷிகா ஆனந்தையும் சேர்ந்து நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, யாஷிகாவும், மஹத்தும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. ஆரம்பத்தில் இதனை மறுத்த இருவரும் பின்னர் ஒப்புக் கொண்டனர்.
சமாதானமான காதலி:
இதனால், மஹத்தின் காதலி பிராச்சி கோபமடைந்தார். பின்னர் மஹத் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும், அவர் சமாதானமடைந்தார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு மஹத்தும் தானும் நல்ல நண்பர்களாக இருப்பதாக யாஷிகா தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை:
இந்த சூழ்நிலையில் மீண்டும் இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மஹத் இந்தப் படத்தில் நடிக்க பிராச்சி ஒப்புக் கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.