மீண்டும் ஜோடி சேரும் மஹத், யாஷிகா.. இந்த விஷயம் பிராச்சிக்குத் தெரியுமா?

புதிய படமொன்றில் மஹத்தும், யாஷிகாவும் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர்.

Recommended Video

சேர்ந்து நடிக்க தயரான மஹத், யாஷிகா- வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலர்களாக உலா வந்த மஹத்தும் யாஷிகாவும் புதிய படமொன்றில் ஜோடியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டபோது, நடிகர் மஹத்துக்கும், யாஷிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. முதலில் இதனை இருவரும் மறுத்தபோதும், பின்னர் அதனை ஒப்புக் கொண்டனர். இதனால் மஹத்தின் காதலி பிராச்சி கோபமானார். பின்னர், மஹத் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் அவர் சமாதானம் அடைந்தது வேறு கதை.

தற்போது மஹத்தும், யாஷிகாவும் நண்பர்களாக இருப்பதாக கூறுகின்றனர். தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் இருவரும் நடுவர்களாக உள்ளனர்.

ஐஸ்வர்யாவுடன் ஒரு படம்:

ஐஸ்வர்யாவுடன் ஒரு படம்:

இந்நிலையில் மஹத்தும் ஐஸ்வர்யாவும் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதாக நேற்று ஒரு அறிவிப்பு வெளியானது. இதனால் யாஷிகாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் தற்போது யாஷிகாவின் ரசிகர்களுக்கு உற்சாக செய்தியாக வந்திருக்கிறது இன்று ஒரு அறிவிப்பு.

யாஷிகாவுடன்:

யாஷிகாவுடன்:

ஆம், புதிய படமொன்றில் மஹத்தும், யாஷிகாவும் ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரதன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை மக்வென் எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்குகிறார்கள். அதாவது மகேஷ் என்பதன் சுருக்கம் தான் மக், வெங்கட் என்பதன் சுருக்கம் தான் வென்.

ரொமான்ஸ்:

ரொமான்ஸ்:

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் மஹத், யாஷிகாவின் ரொமான்ஸ் பற்றி அதிகம் விமர்சிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் அவர்கள் சேர்ந்து நடிக்கும் படத்தில் நிச்சயம் ரொமான்ஸ் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராச்சி:

பிராச்சி:

ஆனால், பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவுடன் மஹத் பழகியதால் அவரது காதலி பிராச்சி தான் அதிகமாக கோபப்பட்டு அடிக்கடி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார். இப்போது மீண்டும் அவர்கள் சினிமாவில் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பதை அவர் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது தான் பலரது ஆச்சர்யம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X