For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சுதந்திர தாகம்.. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை.. மகாத்மா காந்தியை மையமாக வைத்து உருவான படங்கள்!

  |

  சென்னை: தேசப்பிதா என்றும் மகாத்மா காந்தி என்றும் இந்தியா சுதந்திரம் பெற முக்கிய காரணியாக இருந்தவர் என்றும் போற்றப்படுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை மையக் கருவாக வைத்து எத்தனையோ படங்களை இயக்கி உள்ளன.

  பல சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளும் கத்தியையும் ரத்தத்தையும் சொல்லித் தந்த நிலையில், அகிம்சையால் ஆங்கிலேயரை இம்சித்த ஒரு மகத்தான தலைவர் காந்தி.

  ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த ஹாலிவுட் காந்தி முதல் கமல்ஹாசனின் கோலிவுட் ஹேராம் படம் வரை மகாத்மா காந்தி நிறைந்து இருக்கும் குறிப்பிட்ட சில படங்களை இங்கே காண்போம்.

  9 ஹவர்ஸ் டு ராமா

  9 ஹவர்ஸ் டு ராமா

  1963ம் ஆண்டு வெளியான திரைப்படம் 9 ஹவர்ஸ் டு ராமா (9 Hours to Rama). இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் காந்தியை நாதுராம் கோட்ஸே சுட்டுக் கொல்வது தொடர்பான முடிவை எடுக்க வைத்த கோட்சேவினுடைய வாழ்க்கையின் அந்த இறுதி ஒன்பது மணி நேரம் தான் படத்தின் கதை. அமெரிக்க வரலாற்றாசிரியர் ஸ்டான்லி வால்பர்ட் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு கனடாவைச் சேர்ந்த மார்க் ராப்ஸன் இந்த படத்தை இயக்கி இருப்பார்.

  8 ஆஸ்கர் விருதுகள்

  8 ஆஸ்கர் விருதுகள்

  மகாத்மா காந்திக்கு இதுவரை இந்தியர்கள் கூட இந்தளவுக்கு ஒரு பயோபிக்கை எடுத்தது இல்லை என்றே சொல்லாம். அந்த அளவுக்கு காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமாக ‘காந்தி' படத்தை 1982ம் ஆண்டு இங்கிலாந்து இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கி இருந்தார். இதில், மகாத்மா காந்தியாக பிரபல ஹாலிவுட் நடிகர் பென் கிங்க்ஸ்லி நடித்திருப்பார். சிறந்த படம் உள்ளிட்ட 8 ஆஸ்கர் விருதுகளை வென்றது இந்த படம்.

  தி மேக்கிங் ஆஃப் மகாத்மா

  தி மேக்கிங் ஆஃப் மகாத்மா

  பிரபல எழுத்தாளர் பாத்திமா மிர் எழுதிய ‘The Apprenticeship of a Mahatma'. என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு ஷ்யாம் பெனகல் 1996ம் ஆண்டு இயக்கிய படம் தான் தி மேக்கிங் ஆஃப் மகாத்மா. காந்தி சிறு வயதில் தென்னாப்பிரிக்காவின் காலணி ஆதிக்கத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதை இந்த படம் எடுத்து உரைத்திருக்கும்.

  கோலிவுட்டில் காந்தி

  கோலிவுட்டில் காந்தி

  நடிகர் கமல்ஹாசன் எழுதி, இயக்கிய ஹேராம் படத்திலும், மகாத்மா காந்தியை சுற்றியே திரைக்கதை பின்னப்பட்டு இருக்கும். 9 ஹவர்ஸ் டு ராமா படத்தில் எப்படி கோட்சேவின் கதையை எடுத்து இருப்பார்களோ அதே போல ஹேராம் படத்தில் கோட்சேவை போல இன்னொரு நபர் காந்தியை கொல்ல முயற்சி செய்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கதையை காந்திய தத்துவத்தை மக்களுக்கு எடுத்துக் காட்ட கமல்ஹாசன் உருவாக்கிய படம் தான் ஹேராம்.

  மகாத்மாவின் ஆத்மா

  மகாத்மாவின் ஆத்மா

  வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.' என்ற இந்திப் படத்தின் 2ம்பாகமாக ராஜ்குமார் ஹிரானி இந்த படத்தை உருவாக்கி இருப்பார். லகே ரஹோ முன்னாபாய் என்ற இந்த படத்திலும், சஞ்சய் தத் நாயகனாக நடித்திருப்பார். மேலும், அவரது உடம்புக்குள் மகாத்மாவின் ஆத்மா புகுந்து கொண்டு, காந்தியக் கொள்கைகளை வலியுறுத்தும் விதமாக இந்த படம் உருவாகி இருக்கும்.

  மூன்று தேசிய விருதுகள்

  மூன்று தேசிய விருதுகள்

  இயக்குநர் ஃபெரோஸ் அபாஸ் கான் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் வெளியான படம் காந்தி, மை ஃபாதர். மூன்று தேசிய விருதுகளை இந்த படம் தட்டிச் சென்றது. வழக்கத்துக்கு மாறாக, இந்த படத்தில் காந்தியின் குடும்ப வாழ்க்கையையும், அவர் தனது மகன் ஹரிலாலை சரியாக வளர்க்காதது குறித்து இந்த படம் பேசப்பட்டு இருக்கும்.

  ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதங்கள்

  ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதங்கள்

  2011ம் ஆண்டு இயக்குநர் ராகேஷ் ரஞ்சன் குமார் இயக்கிய படம் "Dear Friend Hitler". இரண்டாம் உலகப் போர்ச் சூழலில் ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் காந்தியாக அவிஜித் தத் நடித்திருந்தார். ஹிட்லராக ரகுபீர் யாதவ் நடித்திருந்தார். கடும் விமர்சனங்களை இந்த படம் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

  தமிழகத்தில் காந்தி

  தமிழகத்தில் காந்தி

  மகாத்மா காந்தியை மையமாக வைத்து கடந்த 2014ம் ஆண்டு உருவான படம் வெல்கம்பேக் காந்தி. காமராஜரின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கிய ஏ.பாலகிருஷ்ணன் இப்போ தமிழ்நாட்டில் காந்தி வாழ்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையுடன் இந்த படத்தை இயக்கி இருந்தார். பாலிவுட் நடிகர் அனுபம் கெர் மற்றும் எஸ்.கனகராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

  English summary
  Father of our Nation Mahatma Gandhi presence in several Hollywood to Kollywood movies. Here we look at some interesting movies on Gandhi.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X