கமல் - உதயநிதியை இணைத்தவர்.. விக்ரம் வெற்றிக்கு காரணமானவர்.. யார் இந்த மகேந்திரன்!

சென்னை : தமிழில் ஒரு சிறந்த பான் இந்திய திரைப்படம் வெளியாகாதா என்ற எதிர்பார்ப்பு தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களை கமல்ஹாசன் பாராட்டி பரிசளித்து மகிழ்ந்து வருகிறார்.

விக்ரம் திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் விக்ரம் படத்தின் இணைய தயாரிப்பாளர் ஆர் மகேந்திரன். யார் இந்த மகேந்திரன் என்று பார்க்கலாமா?

விக்ரம்

விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, காயத்ரி, செம்பன் வினோத் என பலர் நடித்துள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது.

அனைவருக்கும் அன்பு பரிசு

அனைவருக்கும் அன்பு பரிசு

விக்ரம்' திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்க்கு லக்சஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். மேலும் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு அப்பாச்சி 160 ஆர்டிஆர் பைக் கமல் பரிசாக வழங்கினார்.மேலும், படத்தின் இறுதி ஐந்து நிமிடத்தில் முக்கிய வில்லனாக வந்து கலக்கி சூர்யாவுக்கு 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரோலக்ஸ் வாட்டை பரிசாக அளித்தார்.

400 கோடி வசூல்

400 கோடி வசூல்

தமிழ் சினிமாவின் முந்தைய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனைகளை முறியடித்து நம்பர் 1 வசூல் படமாக இப்படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. நான்காவது வாரத்திலும் நூற்றுக்கும் அதிகமான தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் வெளியாகி 25 நாட்கள் ஆகிய நிலையில் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.400 கோடி வசூல் செய்துள்ளது.

விக்ரம் உருவாக காரணம்

விக்ரம் உருவாக காரணம்

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களை பாராட்டி வரும் நேரத்தில் விக்ரம் திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் விக்ரம் படத்தின் இணைய தயாரிப்பாளர் ஆர் மகேந்திரன். லோகேஷ் கனகராஜ், கமல் இணைய முக்கிய காரணமாக இருந்தவர் இந்த மகேந்திரன் தான். அதுமட்டும் இல்லாமல் அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த உதயநிதி மற்றும் கமலை கைகோர்க்க வைத்ததும் இவர் தான்.

இமாலய வெற்றி

இமாலய வெற்றி

கமலின் நூற்றுக்கணக்கான படங்கள் கொடுக்காத ஒரு மாபெரும் வெற்றியையும், தமிழ் சினிமா இதுவரை காணாத இமாலய வெற்றியையும் பெற காரணமாக இருந்தவர் மகேந்திரன் தான். இன்றும் கமலின் அலுவலகத்திற்கு சென்றால் வாசலில் தொடங்கி அலுவலகத்தின் மூளைமுடுக்கெல்லாம் கேட்கும்படி பாடலின் மூலம் கமலிஷசத்தை பரவச் செய்தவரும் இவரே.

Recommended Video

Surya | Madhavan-னை பார்த்து திகைத்து போன Suriya | Rocketary *TamilNadu | Oneindia Tamil
கமலை விட்டு பிரிவில்லை

கமலை விட்டு பிரிவில்லை

அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் தோல்வியை சந்திப்பதற்கு மகேந்திரன் தான் முக்கிய காரணம் என பலர் குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், கமலஹாசனின் கட்சியை விட்டு பலர் சென்றாலும் இன்று வரை கமலை விட்டு நீங்காமல் இருக்கிறார் ஆர் மகேந்திரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X