28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்
சென்னை : 1994 ம் ஆண்டு நாட்டாமை படத்தின் மூலம் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழடைந்துள்ளார்.
Recommended Video
2021 ல் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கேரக்டராக நடித்தன் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற நடிகராகி விட்டார் மகேந்திரன். மாஸ்டர் படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகராகவும் ஆகி விட்டார் மகேந்திரன். தனுஷின் 43 வது படமான டி 43 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் மகேந்திரன்.
இந்நிலையில் இன்றுடன் சினிமாவில் தான் 28 ஆண்டுகளை நிறைவு செய்து, 29 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதுவரை தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மகேந்திரன் தனது பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், நீங்க கொடுத்த இந்த மாஸ்டர் மகேந்திரன் என்ற அடையாளத்தோடு 29வது வருஷத்துல அடி எடுத்து வைக்கிறேன். இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில எனக்காக நேரம் எடுத்து விஸ் பண்ண உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி. நீங்க நல்லா இருந்தா,நாங்க நல்லா இருப்போம் நீங்க பாதுப்பாக இருங்க என குறிப்பிட்டுள்ளார்.
மகேந்திரன் பதிவிட்ட 30 நிமிடங்களிலேயே 7000 க்கும் அதிகமானவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பரத் உள்ளிட்ட நடிகர்களும் மகேந்திரனின் இந்த பதிவிற்கு லைக் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











