Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இப்போ நான் மாஸ்டர் மஹி இல்ல… ட்விட்டரில் கலக்கும் ஹீரோ மகேந்திரன்
சென்னை : குழந்தை நட்சத்திரமாக மின்னிய மகேந்திரன் ஹீரோவாக நல்ல கதையை தேடி வருகிறார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தைப் பதிவேற்றி, பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.
நாட்டாமை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நமக்கெல்லாம் அறிமுகமாகியவர் மாஸ்டர் மஹேந்திரன். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகுமிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக மின்னினார் மகேந்திரன். அவருக்கு அடுத்து அடுத்து படங்கள் குவிந்தன. 'தாய்குலமே தாய்குலமே' படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார்.
அதன் பின் நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அந்த குழந்தை கதாபாத்திரத்தில் இவரே நடித்தார் . தொடர்ந்து தமிழ் ,மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார். அதன் பின் 1998ல் வெளிவந்த கும்பகோணம் கோபாலு படத்தில் மீண்டும் இவருக்கு குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது கிடைத்தது. ரஜினியுடன் படையப்பா படத்திலும் நடித்திருப்பார்.
2001ல் தெலுங்கில் வெளிவந்த லிட்டில் ஹார்ட்ஸ் திரைப்படத்திலும் மூன்றாவது தேசிய விருதை பெற்றார் மகேந்திரன். அதுவரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மகேந்திரன் "முதல் காதல் மழை" படம் மூலம் ஹீரோவானார். இதையடுத்து ஜக்குபாய் படத்தில் சரத்குமாருடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
மேலும், "விழா" என்ற படத்திலும் நடித்து இருந்தார். ஆனால் எதுவும் பெயர் சொல்லும் படமாக அமையாததால் நல்ல கதைக்காக தற்போது காத்துக்கொண்டு இருக்கிறார். எப்படியும் நல்ல வாய்ப்பு வரும் என்று அதற்காக தனது உடலை தயார்படுத்தி வருகிறார். தீவிர உடற்பயிற்சி செய்து அந்த புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
ஹீரோ சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோ ஆக்குமா? ஹீரோவை பார்க்க இதோ 5 காரணங்கள்!
தற்போது மஹி என்கிற மஹேந்திரன் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருப்பதை கண்ட பல ரசிகர்கள் அவருக்கு அவரின் சிறு வயதில் நடித்த பல படங்களில் இருந்து வரும் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர் .இதனால் மஹேந்திரனும் தனது ட்விட்டரில் தனது குழந்தை முக புகைப்படத்தையே வைத்து தன்னை அடையாளபடுத்தி கொள்கிறார் .
குழந்தை நட்சத்திரமாக 3 தேசிய விருது, 1நந்தி விருது மற்றும் பல படங்களில் அசத்தியா மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவை ஒரு ரவுண்ட் அடித்தது போல் ஹீரோவாகவும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்க படுகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!