மந்தைவெளி கல்லறையில் நிரந்தரமாக தூங்கும் மகேந்திரன்
சென்னை: இயக்குநர் மகேந்திரனின் உடல் மந்தைவெளியில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல் ஹாஸன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

மகேந்திரனின் உடலை பார்த்த பாரதிராஜா கதறி அழுதுவிட்டார். பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மகேந்திரனின் உடல் மந்தைவெளியில் உள்ள கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மகேந்திரனின் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பாலா, அமீர், வெற்றிமாறன், சேரன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், குடும்பத்தாரும் கலந்து கொண்டனர். அவரின் உடல் மந்தைவெளி கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மகேந்திரன் இந்த உலகை விட்டுச் சென்றாலும் அவர் தனது படங்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











