என்னோட பவானி...விஜய் சேதுபதியை சந்தித்து வாழ்த்து பெற்ற மகேந்திரன்

சென்னை : 1994 ம் ஆண்டு 'நாட்டாமை' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். இவரை நடிகர் மகேந்திரன் என்று சொல்வதை விட மாஸ்டர் மகேந்திரன் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு குழந்தை நட்சத்திரமாக, தனது துடிப்பான நடிப்பால் பலரையும் கவர்ந்துள்ளார்.

Recommended Video

VIJAY SETHUPATHI அண்ணன் கொடுத்த SURPRISE | ACTOR DHEENA CHAT PART - 02 | FILMIBEAT TAMIL

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து, பல விருதுகளையும் பெற்றுள்ளார். 3 வயதில் நடிக்க துவங்கிய மகேந்திரன், 6 மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சாதனை படைத்துள்ளார்.

நடிகராக பேசப்படாத மகேந்திரன்

நடிகராக பேசப்படாத மகேந்திரன்

2013 ம் ஆண்டு 'விழா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவராக இருந்தாலும், நடிகராக பல படங்களில் நடித்தும் இவர் அடையாளம் காணப்படவில்லை. இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவான இவர் தொடர்ந்து தனது ஒர்க் அவுட் வீடியோக்கள், ஃபோட்டோக்களை பகிர்ந்து வந்தார்.

அங்கீகாரம் தந்த மாஸ்டர்

அங்கீகாரம் தந்த மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில், விஜய் சேதுபதியின் சிறு வயது கேரக்டரில் நடித்ததன் மூலம் தற்போது அனைவருக்கும் அறிமுகமான நடிகராகி விட்டார் மகேந்திரன். மாஸ்டர் படத்திற்கு பிறகு மகேந்திரனுக்கு பல பட வாய்ப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவர் சமீபத்தில் புதிதாக கார் வாங்கி உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் கையால் கார்

லோகேஷ் கனகராஜ் கையால் கார்

அதுவும், "நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் நடிகனாக எனக்கு அங்கீகாரம் தந்தது 'மாஸ்டர்' படம் தான். அதனால் அந்த படத்தின் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கையால் தான் காரை வாங்குவேன்" என கூறி, அவரையும் கையோடு ஷோரூமிற்கு அழைத்துச் சென்று, அவர் கையால் தான் கார் சாவியை பெற்றார்.

விஜய் சேதுபதியிடம் வாழ்த்து

விஜய் சேதுபதியிடம் வாழ்த்து

இந்நிலையில் நேற்று விஜய் சேதுபதியை தனது புது காரில் சென்று சந்தித்தார் மகேந்திரன். அலுவலகத்தில் இருந்த விஜய் சேதுபதியிடம் தான் கார் வாங்கிய தகவலை சொல்லி அவரிடம் வாழ்த்தும் பெற்றுள்ளார். மகேந்திரனை பாராட்டிய விஜய் சேதுபதியும், அந்த புதிய காரை தானே ஓட்டி பார்த்துள்ளார்.

என்னுடைய பவானி

இந்த ஃபோட்டோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மகேந்திரன், "என்னுடைய பவானி" என கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். இந்த ஃபோட்டோவை 67,000 க்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். மகேந்திரனுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X