twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமா மீதான கோபத்தால் யதார்த்த படங்களை எடுத்தேன்: மகேந்திரன்

    By Siva
    |

    Recommended Video

    Director Mahendran: காலமானார் இயக்குனர் மகேந்திரன்- வீடியோ

    சென்னை: தமிழ் சினிமா மீதான கோபம் தான் நான் யதார்த்த படங்களை எடுக்க காரணம் என்று முன்பு தெரிவித்திருந்தார் இயக்குநர் மகேந்திரன்.

    எதார்த்த சினிமா படங்களை அளிப்பதற்கு பெயர் போன இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். நாம் மூவர் படத்திற்கு கதை எழுதி தனது சினிமா பயணத்தை துவங்கியவர் மகேந்திரன்.

    கடைசி வரை கலை பணியாற்றிக் கொண்டிருந்தார். சினிமா பற்றி மகேந்திரன் முன்பு பேட்டி ஒன்றில் கூறியதாவது,

    சினிமா

    சினிமா

    எம்.ஜி.ஆர். முன்பு தமிழ் சினிமாவை விமர்சிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பின்னர் பிரஸ் மீட் ஒன்றில் என்னை பார்த்த அவர் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பொன்னியின் செல்வன் நாவலை பரிசாக அளித்தார். அப்பொழுது தான் ஒரு திரைக்கதை எழுத்தாளராக என் பயணம் துவங்கியது.

    மகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா மகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா

    யதார்த்தம்

    யதார்த்தம்

    தமிழ் சினிமா மீது எனக்கு இருந்த கோபம் தான் நான் யதார்த்த படங்களை எடுக்க வழிவகுத்தது. நான் மகிழ்ச்சிக்காக படம் எடுத்தேனே தவிர கமர்ஷியல் வெற்றிக்காக அல்ல. என் படங்களில் கதாபாத்திரங்கள் இயல்பாக பேசி, சிரித்தார்கள்.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த் மட்டும் நடிக்கவில்லை என்றால் நான் முள்ளும் மலரும் படத்தை எடுத்திருக்க மாட்டேன். அந்த படத்திற்கு செட் பக்கமே வராத தயாரிப்பாளர் இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் இருந்தார், இளையராஜா இசையமைத்தார், பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். அந்த படம் ஹிட்டானது.

    பிடித்த இயக்குநர்

    பிடித்த இயக்குநர்

    ரஜினிகாந்தை கே. பாலசந்தர் அறிமுகம் செய்து வைத்திருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மகேந்திரன் தான். இதை ரஜினிகாந்த் பாலசந்தரிடமே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Earlier Mahendran said in an interview that his anger towards Tamil films motivated him to make films that are real, where people smiled and spoke normally.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X