ஆசை நிறைவேறாமலேயே சென்ற மகேந்திரன்
Recommended Video

Director Mahendran:காலமானார் இயக்குனர் மகேந்திரன்
சென்னை: இயக்குநர் மகேந்திரன் தனது ஆசை நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.
காலத்தால் அழியாத படங்களை அளித்த இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மகேந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சாசனம். 2006ம் ஆண்டுக்கு பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை. 2016ம் ஆண்டில் அவர் விஜய்யின் தெறி படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தினார்.
மகேந்திரன் புதுமைப்பித்தன் நாவல்களில் ஒன்றை அடிப்படையாக வைத்து படம் எடுக்க திட்டமிட்டார். அந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைக்க விரும்பினார். கடைசி வரை அந்த பட வேலைகள் துவங்கவில்லை.
அவரின் கடைசி ஆசை நிறைவேறாமலேயே இந்த உலகை விட்டுச் சென்றுவிட்டார்.


Click it and Unblock the Notifications











