மச்சானை மறக்காத மகேந்திரன்.. மாஸ்டர் மகேந்திரனின் பிரத்யேக பேட்டி!

சென்னை: விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், ஆண்ட்ரியா நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.

Recommended Video

VIJAY SETHUPATHI ரொம்ப திட்டுவார் | ACTOR MAHENDRAN CHAT PART-01 | FILMIBEAT TAMIL

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். XB FilmCreators நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் மகேந்திரன் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் படம் குறித்து இன்னும் பலவற்றை பேட்டியளித்துள்ளார்.

வாய்ப்பிற்கு காரணம்

வாய்ப்பிற்கு காரணம்

மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தற்கு முக்கியமான காரணம் விஜய் சேதுபதியின் மச்சான் ராஜேஷ் எனவும், ராஜேஷ் கூறிதான் லோகேஷை சந்தித்து வாய்ப்பு பெற்றதாகவும் கூறியுள்ளார். இந்த உதவியை தன் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

லோகேஷ், அனிருத்துடன் நெருக்கம்

லோகேஷ், அனிருத்துடன் நெருக்கம்

லாக்டவுனில் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிய போது எடுத்த புகைப்படம் வைரலானது. அது போல மகேந்திரன் லாக்டவுனில் நள்ளிரவெல்லாம் லோகேஷ், அனிருத்துடன் அவ்வப்போது தொடர்ந்து வீடியோ கால் பேசியதாகவும் பேட்டியளித்துள்ளார்.

பெரிய சாதனை

பெரிய சாதனை

மாஸ்டருக்கு முன் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் 26 வருடங்களுக்கு முன் வெளியான தன்னுடைய அறிமுக படமான நாட்டாமை படம் தான் தன் வாழ்நாளில் மறக்க முடியாத படம் என கூறியுள்ளார். மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அதிக படங்களில் நடித்தது இன்று வரையில் இந்திய அளவில் பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்த்தியான நடிப்பு

நேர்த்தியான நடிப்பு

மாஸ்டரில் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் பலரின் கைத்தட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார் மகேந்திரன். இப்படி பட்ட நடிகருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து தக்க வைத்து கொள்ளுமா தமிழ் சினிமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மாஸ்டர் ஸ்பெஷல்

மாஸ்டர் ஸ்பெஷல்

இன்று வெளியாகியுள்ள மாஸ்டர் படம் குறித்து இன்னும் பல விஷயங்களை இந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோவை மறக்காமல் பில்மி பீட் யூ டியூப் சேனலில் கண்டு களியுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X