மீண்டும் குட்டி பவானியா...த்ரில்லர் கேங்ஸ்டர் படத்தில் ஹீரோவாகிறார் மகேந்திரன்
சென்னை : மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரபலமான நடிகராகி விட்டார் மகேந்திரன். இவர், மாஸ்டர் படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் சிறு வயது கேரக்டராக நடித்திருந்தார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு ஏராளமான பட வாய்ப்புக்கள் மகேந்திரனுக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே 2 படங்களில் நடிக்க மகேந்திரன் ஒப்பந்தம் ஆகி உள்ள நிலையில் தற்போது அமிகோ கேரேஜ் என பெயரிடப்பட்டுள்ள கேங்ஸ்டர் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அறிமுக இயக்குனரான பிரசாந்த் நாகராஜன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட உள்ளது. இந்த படம் பற்றி டைரக்டர் பிரசாந்த் கூறுகையில், ஒரு கேரேஜை சுற்றியே படத்தின் கதை அமைந்துள்ளதால் படத்திற்கு இந்த பெயரை வைத்தோம். கேங்ஸ்டர் என்றாலே மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட இமேஜ் உள்ளது.
ஆனால் அவர்களின் வாழ்க்கையிலும் பலவிதமாக எமோஷன்கள் இருக்கும். ஆரம்பத்தில் அவர்களும் சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை சொல்வது தான் இந்த கதை என்றார்.
இந்த படத்தில் மகேந்திரன் சந்தோஷமான, அதிர்ஷ்டமான இளைஞராக நடிக்க உள்ளார். இதில் ஜிஎம் சுந்தரும் முக்கிய ரோலில் நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த புதுமுகமான ஆதிரா, மகேந்திரனுக்கு ஜோடியாக நடிக்கிறார். கனா, ஆர்கே நகர் படங்களில் நடித்த தசர்தியும் நடிக்கிறார்.
படத்தின் ஷுட்டிங் ஓசூர் மற்றும் சென்னையில் நடத்தப்பட உள்ளதாம். டைரக்டர் பிரசாந்த், சினிமா மீதான மோகத்தால் தான் பார்த்துக் கொண்டிருந்த கார்ப்பரேட் நிறுவன வேலையை விட்டு விட்டு படம் இயக்க வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











