மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், நானி.. 223 கோடி வசூலை அள்ளிய RRR படத்தை கொண்டாடும் டோலிவுட் நடிகர்கள்!

ஹைதராபாத்: பாகுபலி இரண்டாம் பாகம் முதல் நாளில் உலகளவில் 218 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், என்னை தோற்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே அட! அவனும் இங்க நான் தானே என இயக்குநர் ராஜமெளலி RRR படம் மூலம் முதல் நாளே ரூ. 223 கோடி வசூல் வேட்டையை ஆடி உள்ளார்.

Recommended Video

RRR MOVIE REVIEW | JNTR | Ramcharan | SS Rajamouli | Filmibeat Tamil

பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் கோலிவுட் ஹீரோக்கள் ஒரு வாழ்த்துக் கூட தெரிவிக்காமல் அமைதி காத்து வரும் சூழலில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரை டோலிவுட்டின் அனைத்து டாப் ஹீரோக்களும் கொண்டாடி வருகின்றனர்.

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் நேச்சுரல் ஸ்டார் நானி என பலரும் ஆர்ஆர்ஆர் படம் பற்றியும் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பு பற்றியும் என்ன சொல்லி உள்ளனர் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

223 கோடி

223 கோடி

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உயிரைக் கொடுத்து காட்சிக்கு காட்சி மிரட்டி உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் பெற்ற வசூலை விட அதிகமாக அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 223 கோடி ரூபாய் இந்த படம் முதல் நாளில் குளோபல் பாக்ஸ் ஆபிஸில் அள்ளி உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

மகேஷ் பாபு பாராட்டு

மகேஷ் பாபு பாராட்டு

படங்கள், ராஜமெளலி படங்கள் என இரு வகை பிரிக்க வேண்டும். RRR படம் ஒரு எபிக். பிரம்மாண்ட விஷுவல்கள், இசை, எமோஷன்ஸ் எல்லாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பெரிதாக உள்ளது. மொத்தத்தில் தெறிக்கவிடுகிறது என டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து வரிசையாக ட்வீட் போட்டுள்ளார்.

ரெண்டு பேருமே பறக்கிறாங்க

ரெண்டு பேருமே பறக்கிறாங்க

ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் அவர்களின் ஸ்டார்மை மேலும் வளர்க்கும் விதமாக உலகின் தலை சிறந்த நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி மிரட்டிருக்காங்க.. நாட்டு நாட்டு பாடலில் கிராவிட்டி விதிகளை எல்லாம் மீறி இருவரும் அப்படியே ஆகயத்தில் பறக்கிறாங்க என மகேஷ் பாபு மனமார பாராட்டி உள்ளார்.

புஷ்பா ஹேப்பி

புஷ்பா ஹேப்பி

இயக்குநர் ராஜமெளலியின் அந்த பிரம்மாண்ட விஷனுக்கு நான் ரொம்பவே மரியாதை கொடுக்கிறேன். என்னோட சகோதரர் மெகா பவர்ஸ்டார் ராம்சரண் மற்றும் தாரக் இருவருமே என்னம்மா கலக்கி இருக்காங்க.. அஜய் தேவ்கன் அவரோட ரோலை அசால்ட்டாக பண்ணி உள்ளார். ஆலியா பட் சிறப்பு என ஒட்டுமொத்த படக்குழுவையும் புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டி உள்ளார்.

ராமுடு பீமுடு

ராமுடு பீமுடு

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படத்தில் நடித்த நடிகர் நேச்சுரல் ஸ்டார் நானியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரம்மாண்ட தியேட்டர் அனுபவத்தை தந்த இயக்குநர் ராஜமெளலிக்கு மிகப்பெரிய நன்றி என்றும் எப்போதும் தனது சத்தியத்தை அவர் தவற விடமாட்டார் என்றும் பாராட்டித் தள்ளி உள்ளார்.

பிரபாஸ் பார்க்கப் போறாரு

பிரபாஸ் பார்க்கப் போறாரு

வரும் திங்கட்கிழமை இயக்குநர் ராஜமெளலி இயக்கி உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை தியேட்டருக்கு சென்று நடிகர் பிரபாஸ் பார்க்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகுபலி படத்தின் இரு பாகங்கள் மூலமாக பான் இந்திய நடிகர் என்கிற அந்தஸ்த்தை பிரபாஸ் அடைந்த நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளாராம் பிரபாஸ்.

கோலிவுட் நடிகர்களும்

கோலிவுட் நடிகர்களும்

டோலிவுட் நடிகர்களை போலவே கோலிவுட் நடிகர்களும் நல்ல படங்கள் மற்றும் பெருமை மிகு படைப்புகள் தமிழ் சினிமாவில் வரும் போது அதற்கு தங்களது முழு ஆதரவையும் தர வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். டாப் ஹீரோக்கள் இங்கேயும் இணைந்து நடித்து இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X