தசரா விடுமுறையை கொண்டாட இத்தாலி பறந்த மகேஷ் பாபு ஃபேமிலி

ஹைதராபாத்: தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தசரா விடுமுறையை கொண்டாட ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மகன் கௌதம் மற்றும் மகள் சித்தாரா, மனைவி நம்ரதா ஷிரோத்கர் உடன் சுவிஸ் ஆல்ப்ஸின் பின்னணியில் எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் மகேஷ் பாபு.

அணில் ரவிப்புடி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் திரைப்படம் சரிலேறு நீக்கேவரு. சில மாதங்களாக படப்பிடிப்பு மிக விரைவாக நடைபெற்று வந்த நிலையில் திட்டமிட்டபடி இடைவெளி எடுத்து, தற்போது மகேஷ்பாபு தனது குடும்பத்திற்காக சிறுது நேரம் ஒதுக்கியுள்ளார். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு குறுகிய விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் செலவு செய்வதற்காக இத்தாலியில் உள்ள மிலன் நகரத்திற்கு சென்றுள்ளார்.

Mahesh Babu and family celebrates Dussehra holiday in Italy

குடும்பத்துடன் டோலிவுட் சூப்பர் ஸ்டார் விடுமுறை நாட்களை கொண்டாடிவரும் நிலையில் அவரது மனைவியும் முன்னாள் பாலிவுட் நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் தங்களின் இனிமையான விடுமுறை அனுபவங்களை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். மகேஷ் பாபு மற்றும் அவரது மகன் கவுதம் இருவரும் விளையாடும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

மகேஷ் பாபு தனது மகன் கௌதம் மற்றும் மகள் சித்தாரா, மனைவி நம்ரதா ஷிரோத்கர் உடன் சுவிஸ் ஆல்ப்ஸின் பின்னணியில் எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் மகேஷ் பாபு.

இந்த பதிவிற்கு அவர் பூமியில் எனக்கு மிகவும் பிடித்த இடம் சுவிஸ் ஆல்ப்ஸ். இந்த குறுகிய கால தசரா விடுமுறையை எனது குடும்பத்துடன் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி போல அனுபவித்து வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் வோக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மகேஷ் பாபு மற்றும் அவரது மனைவி நம்ரதா ஷிரோத்கர் இருவருக்கும் இடையே இந்த வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன என்று கேட்ட கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்தார். நம்ரதாவுக்கும் எனக்கும் திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகின்றன.

நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம். இருவரும் அவரவராக இருக்க அனுமதிக்கிறோம். ஒரு திருமணம் வெற்றிபெறுவதற்கு இது மிக முக்கியமான ரகசியம். இருவருக்கும் அவரவரின் தனிமைக்கான இடம் கொடுக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கும் அதே போல தான். அவர்கள் பெற்றோர்களை அடித்தளமாக கொண்டு இருப்பவர்கள்.

இந்த பழக்கம் எனக்கு வரக் காரணம் எனது தந்தை. அவருக்கு தான் நன்றி கூற வேண்டும். அவர் ஒரு நாளும் ஒரு நடிகராக வீட்டிற்குள் வந்ததில்லை, என்று தனது தந்தையான தெலுங்கு முன்னாள் நடிகர் கிருஷ்ணாவை பற்றி பெருமையாக கூறினார்.

மகேஷ் பாபுவை தொடர்ந்து அவரது மனைவி நம்ரதா கூறுகையில் இவரைப் போன்று ஒரு ஒழுக்கமான, அர்ப்பணிப்பான ஒருவரை நான் இதுவரையில் பார்த்ததில்லை. அவரது குடும்பத்தையும் பணியையும் சமநிலையில் சிறப்பாக நடத்தி செல்பவர், என்று தனது கணவர் மகேஷ் பாபுவை பற்றி கூறினார்.

இந்த குறுகிய தசரா விடுமுறைக்கு பிறகு மகேஷ் பாபு தனது சரிலேறு நீக்கேவரு படத்தின் படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாகி விடுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X