மகேஷ் பாபு - ராஜமெளலி படத்தின் டைட்டில் இதுவா?.. 2.5 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்ததற்கு தரமான சம்பவம்!
ஹைதராபாத்: வரும் நவம்பர் 15ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மகேஷ் பாபுவை வைத்து ராஜமெளலி இயக்கி வரும் பிரம்மாண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், படத்தின் டைட்டில் குறித்த தகவல்களும் கசிந்துள்ளன.
டோலிவுட் ஹீரோக்களை பான் இந்தியா சூப்பர் ஸ்டார்களாக மாற்றும் வேலையை இந்தியாவிலேயே வேற எந்தவொரு இயக்குநரும் செய்யாத அளவுக்கு இயக்குநர் ராஜமெளலி செய்து வருகிறார். மகதீரா, நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் என அவர் இயக்கிய அனைத்து படங்களுமே இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கானை விட பிரபாஸ் தான் மெகா இந்தியன் சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் சண்டையிடும் அளவுக்கு பிரபாஸை வளர்த்துவிட்டதே ராஜமெளலி தான் என்றால் அது மிகையல்ல. மேலும், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோரை ஆஸ்கர் மேடை வரை ஏற்றி அழகு பார்த்தார்.
ராஜமெளலிக்காக 2.5 வருஷம்: அடுத்ததாக டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவை இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டாராக மாற்றும் முயற்சியில் களமிறங்கிய ராஜமெளலிக்கு தனது 2.5 வருட கால்ஷீட்டை மொத்தமாக தூக்கிக் கொடுத்து ஒரு மெகா பான் வேர்ல்ட் படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் மகேஷ் பாபு. இந்த படத்தில் ஹாலிவுட் படங்களில் அசத்தி வரும் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா லீடு ரோலில் நடித்து வருகிறார். வில்லனாக பிருத்விராஜ் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதான் டைட்டிலா?: வெளிநாட்டில் உள்ள காடுகளில் படத்தை பிரம்மாண்டமாக ராஜமெளலி உருவாக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இண்டியானா ஜோன்ஸ் போல இந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்துக்கு 'வாரணாசி' என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. முன்னதாக அனுமான் கதாபாத்திரத்தை வைத்து மகேஷ் பாபுவின் கேரக்டரை ராஜமெளலி செதுக்கி வருகிறார் என்றும் கிஷ்கிந்தா என டைட்டில் வைக்கப்படலாம் என்றும் பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், 'வாரணாசி' தான் உறுதியான டைட்டில் எனக் கூறுகின்றனர். வரும் நவம்பர் 15ம் தேதி ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் போது உண்மை தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











