இதெல்லாம் உண்மைதானா? இத்தனை கோடி சம்பளமா..? மலைக்க வைக்கும் மகேஷ்பாபு!
ஐதராபாத்: 'சரிலேரு நீகேவாரு' என்ற படத்துக்காக, மகேஷ்பாபு வாங்கியதாகக் கூறப்படும் சம்பளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவர் மகேஷ்பாபு. டோலிவுட்டின் 'பிரின்ஸ்' என அழைக்கப்படும் மகேஷ்பாபு, தற்போது நடித்துள்ள படம், சரிலேரு நீக்கெவ்வரு (Sarileru Neekevvaru).

இதில் ராணுவ வீரராக மகேஷ் பாபு நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயின் விஜயசாந்தி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
அனில் ரவிபுடி இயக்கியுள்ள இதில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திரபிரசாத், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதற்குள்ளாகவே அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர். ஐதராபாத்தில் உள்ள சுதர்சன் 35 எம்எம் என்ற தியேட்டரில் 81 அடி உயர கட்-அவுட்டை வைத்துள்ளனர்.
படத்தை 3 நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றன. அதில் ஒன்று, ஹீரோ மகேஷ்பாபுவின் நிறுவனம்.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு, மகேஷ்பாபு சம்பளமாக ரூ.42 கோடி வழங்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது, போன படத்தில் அவர் வாங்கியதில் இருந்து, அப்படியே டபுள் மடங்கு என்கிறது டோலிவுட். ஆனால் இந்தச் சம்பளம் உண்மையா, இல்லையா என்பதை மற்றத் தயாரிப்பாளர்களோ, மகேஷ்பாபுவோ உறுதிப்படுத்தவில்லை.
இது உண்மையாக இருந்தால் தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ மகேஷ்பாபுதான் என்கிறது டோலிவுட்.


Click it and Unblock the Notifications











