மெகா பட்ஜெட்.. விரைவில் ஷூட்டிங்.. மகேஷ்பாபு ஜோடியான கீர்த்தி சுரேஷ்.. உறுதிப்படுத்திய ஹீரோ!

By

சென்னை: பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

'இது என்ன மாயம்' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.

பிறகு, விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று டாப் நடிகர்களுடன் நடித்தார்.

வாழ்க்கை கதை

வாழ்க்கை கதை

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையான, நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி.

இந்தி மைதான்

இந்தி மைதான்

இதில் நடிப்பதற்காக, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகினார். மலையாளத்தில் மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்திலும் இன்னும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையே, இந்தியில் மைதான் என்ற படத்தில் ஒப்பந்தமாகி இருந்த அவர், ஷூட்டிங் தொடங்கிய பின் அதில் இருந்து திடீரென விலகினார்.

போனில் கேட்ட கதை

போனில் கேட்ட கதை

இதில், அஜய் தேவகன், ஹீரோ. அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் தெலுங்கில் ஹீரோவான மகேஷ்பாபு ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டது. கொரோனா தீவிரமான காலகட்டத்தில் போனில் கதை கேட்டு இதற்கு அவர் ஓகே சொல்லி இருந்தார்.

பரசுராம் பெட்லா

பரசுராம் பெட்லா

இந்தப் படத்தை பரசுராம் பெட்லா இயக்குகிறார். இவர், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்த கீதா கோவிந்தம் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர். மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு, சர்காரு வாரி பாட்டா (Sarkaru Vaari Paata)என்று டைட்டில் வைத்துள்ளனர். கொரோனா தீவிரம் குறைந்த பிறகு ஷூட்டிங் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது.

உறுதிப்படுத்திய மகேஷ்

உறுதிப்படுத்திய மகேஷ்

இந்நிலையில் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பதை, ஹீரோ மகேஷ் பாபு உறுதிப்படுத்தி உள்ளார். படத்தில் கிளாமருக்கு இன்னொரு ஹீரோயினும் இருக்கிறாராம். இதற்கு முன், தெலுங்கில் சில இளம் ஹீரோக்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவில்லை. பவன் கல்யாணுடன் மட்டும் நடித்திருந்தார்.

பெரிய வாய்ப்பு

பெரிய வாய்ப்பு

இப்போதும் டாப் ஹீரோவான மகேஷ் பாபுவுடன் நடிக்கிறார். இது அவருக்கு பெரிய வாய்ப்பு என்று கூறுகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், 14 ரீல்ஸ், ஜிஎம்பி என்டர்டெயின் மென்ட் நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X