11 வயசுலயே பெரிய ஸ்டாரான மகேஷ் பாபு மகள்.. பிறந்தநாள் பார்ட்டி வீடியோவை பார்த்தீங்களா!

ஹைதராபாத்: டோலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தனது 11வது பிறந்தநாளை நேற்று கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் உருவாக்கிய பிறந்தநாள் மாஷ் அப் வீடியோ தான் தென்னிந்திய நடிகர்களிலேயே முதன்முறையாக அமெரிக்காவின் டைம் ஸ்கொயர் பில்போர்டில் இடம் பெற்றது.

Mahesh Babu daughter Sitara Ghattamaneni 11th birthday party celebration pics and videos trending

மகேஷ் பாபுவின் புகைப்படங்கள் கூட அங்கே அலங்கரிக்கப்படாத நிலையில், சமீபத்தில், சித்தாரா நடித்த விளம்பர பதாகை அந்த இடத்தை அலங்கரித்து ஓவர்நைட்டில் உலக ஸ்டாராகவே மகேஷ் பாபுவின் மகளை மாற்றியது.

டோலிவுட் சூப்பர்ஸ்டார்: தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு சினிமா வாழ்க்கையை போலவே தனது குடும்ப வாழ்க்கையையும் சீராக கவனித்து வருகிறார்.

கடந்த 2005ம் ஆண்டு நம்ரதா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் மகேஷ் பாபுவுக்கு கெளதம் மற்றும் சித்தாரா என இரு குழந்தைகள் உள்ளனர். தனது இளைய மகள் சித்தாரா கட்டிமேனியின் பிறந்தநாளை சமீபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடி உள்ளார் மகேஷ் பாபு.

மகேஷ் பாபு மகள்: சித்தாரா கட்டிமினேனி 11வது வயது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே சமீபத்தில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடிக்க வந்த அழைப்பை ஏற்று நடித்து அசத்தினார்.

பிஎம்ஜே ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் சித்தாரா நடிக்க அந்த விளம்பரத்தை அமெரிக்காவின் டைம் ஸ்கொயர் பில்போர்டுக்கே அந்த நிறுவனம் கொண்டு சென்று மிகப்பெரிய அங்கீகாரத்தை மகேஷ் பாபு மகளுக்கு சமீபத்தில் கொடுத்திருந்தது. மகேஷ் பாபுவே தனக்கு கூட இன்னும் அந்த இடத்தில் இடம் கிடைக்கவில்லை, என் மகளுக்கு கிடைத்திருக்கிறது என சந்தோஷப்பட்டு போஸ்ட் போட்டிருந்தார்.

Mahesh Babu daughter Sitara Ghattamaneni 11th birthday party celebration pics and videos trending

பர்த்டே பார்ட்டி: இந்நிலையில், கடந்த வியாழனன்று 11 வயது பிறந்தநாளை சித்தாரா கொண்டாடிய நிலையில், அந்த பர்த்டே பார்ட்டி போட்டோக்களும், நீச்சல் குளத்தில் தனது குட்டித் தோழிகளுடன் போட்ட ஆட்டங்களையும் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார் சித்தாரா.

மகேஷ் பாபு ரசிகர்கள் பலரும் சித்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிய நிலையில், பல பிரபலங்களும் குட்டி இளவரசியை வாழ்த்தி வருகின்றனர்.

கூடிய சீக்கிரமே ஹீரோயின் ரெடி: அல்லு அர்ஜுன் மகள் சமந்தாவின் சாகுந்தலம் படத்தில் நடித்த நிலையில், மகேஷ் பாபுவின் மகளும் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

கூடிய சீக்கிரமே அடுத்த ஜெனரேஷன் நடிகை வீட்டில் ரெடியாகி வருகிறாரா என சில பிரபலங்களே கமெண்ட் போட்டு கேட்டு வருகின்றனர். நடிகர் மகேஷ் பாபு குண்டூர் காரம் படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X