சமந்தா பறவை மூஞ்சி, தமன்னா பேல்பூரியாம்: இது மகேஷ் பாபு வர்ணனை
ஹைதராபாத்: தூக்குடு படத்தில் சமந்தாவை பறவை மூஞ்சி என்ற மகேஷ் பாபு, ஆகடு படத்தில் தமன்னாவை பேல்புரி என்று பாடலில் வர்ணித்துள்ளார்.
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுக்கும் சர்ச்சைக்கும் ஏக பொருத்தம். அவர் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.
தற்போது ஆகடு படத்திலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமன்னா
ஆகடு படத்தில் வரும் ஒரு பாடலில் மகேஷ் பாபு தமன்னாவை பேல்பூரி, சப்போட்டோ ஜூஸ், தக்காளி ஜூஸ், குல்பி, பர்பி என்று வர்ணிக்கிறார். ஒரு பெண்ணை இப்படியா மரியாதை இன்றி உணவுடன் ஒப்பிட்டு பாடுவது என்று விமர்சனம் கிளம்பியுள்ளது.

சமந்தா
தூக்குடு படத்தில் மகேஷ் பாபு ஒரு காட்சியில் சமந்தாவை பறவை மூஞ்சி என்று கூறியிருப்பார்.

நே ஒக்கடினே
நே ஒக்கடினே போஸ்டரில் மகேஷ் பாபுவுக்கு பின்னால் ஹீரோயின் நாலு கால் பாய்ச்சலில் சென்றதை சமந்தா கடுமையாக விமர்சித்தார்.

இயக்குனர்
மகேஷ் பாபு ஹீரோயினை அப்படி சொன்னார், இப்படி வர்ணித்தார் என்று பிரச்சனையை கிளப்புகிறார்கள். அவராகவா ஆசைப்பட்டு கூறுகிறார். இயக்குனர் கூறுவதை அவர் செய்கிறார். பாடலில் அவர் தமன்னாவை வர்ணித்தார் என்றார் பாடல் ஆசிரியர் எழுதியதை பாடகர் பாடியதற்கு வாய் அசைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











