மனைவியுடன் வந்து திடீரென தெலங்கானா முதலமைச்சரை சந்தித்த மகேஷ் பாபு.. 50 லட்சம் நிவாரண நிதி!
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தை சமீபத்தில் மழை வெள்ளம் கடுமையாக தாக்கிய நிலையில், சினிமா பிரபலங்கள் பலர் முன் வந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்த நிலையில், டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று தனது மனைவி நர்மதாவுடன் தெலங்கானா முதலமைச்சரை சந்தித்து நிதியுதவி வழங்கியுள்ளார். அதன் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 30க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தனர்.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெலங்கானா மழை வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை திரட்டி வரும் நிலையில், ஏகப்பட்ட டோலிவுட் நடிகர்கள் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
சிம்பு நிதியுதவி: தெலுங்கு நடிகர்களை தாண்டி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு 6 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி இருந்தார். அவருக்கு பவன் கல்யாண் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். பவன் கல்யாண், பாலய்யா, பிரபாஸ், அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் நிதியுதவி: டோலிவுட்டின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தை இன்னும் 75 நாட்களில் வெளியிட ரெடியாகி வருகிறார். தெலங்கானா வெள்ள பாதிப்பை சமாளிக்கும் விதமாக ரேவந்த் ரெட்டி நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவியை அல்லு அர்ஜுன் வழங்கி உள்ளார்.

மகேஷ் பாபு 50 லட்சம்: டோலிவுட் நடிகர் மகேஷ் பாபு நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தனது மனைவி நர்மதாவுடன் சென்று இன்று சந்தித்து 50 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கி உள்ளார். மேலும், தனது தியேட்டர் நிர்வாகம் சார்பில் தனியாக ஒரு 10 லட்சம் ரூபாயும் மகேஷ் பாபு நிதியுதவி அளித்திருப்பதாக கூறுகின்றனர்.
கீனு ரீவ்ஸ்: ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் போல ராஜமெளலி படத்தில் நடிப்பதற்காக மகேஷ் பாபு மாறி வருகிறாரா? என அவரது லேட்டஸ்ட் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீண்ட முடியுடன் ஃபிட்டான பாடியையும் டெவலப் செய்து வைத்து இருக்கும் மகேஷ் பாபு ராஜமெளலி படத்திற்காக பக்காவாக ரெடியாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











