ஆயிரம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபுவின் கருணை உள்ளம்
Recommended Video
ஹைதராபாத்: மகேஷ்பாபு கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஹீல் எ சைல்ட் ஃபவுண்டேஷனுடன் எனும் சேவை மையத்தோடு இணைந்து ஆயிரம் சிறு குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை செய்வதற்கான செலவை நன்கொடையாக வழங்கி வருகிறார். அவருடைய இந்த மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக தூள் கிளப்பும் மகேஷ் பாபு டோலிவுட்டில் மட்டுமல்லாமல் ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

அதோடு தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களை கொண்டுள்ள நடிகராகவும் உள்ளார். இதன் காரணமாகவே தமிழ் நாட்டில், மற்ற தெலுங்கு நடிகர்களின் படங்களைக் காட்டிலும், மகேஷ்பாபுவின் படங்கள் அதிகமாக வசூலாகி வருகின்றன.
தற்போது ஹைதராபாத்தில் ஏசியன் மகேஷ் பாபு சினிமாஸ் (AMB சினிமாஸ்) எனும் ஏழு திரைகள் கொண்ட சூப்பர் பிளெக்ஸ் திரையரங்கினை தெலுங்கு திரைப்பட துறையின் முன்னணி விநியோக நிறுவங்களின் ஒன்றான ஏசியன் குழுமத்துடன் இணைந்து துவங்கியுள்ளார்.

மகேஷ்பாபு இவ்வளவு பிஸியாக இருக்கையில், சமீபத்தில் இவரைப் பற்றிய வதந்திகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன. இவர் விரைவில் அரசியலில் நுழைவதற்கு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் பரவ ஆரம்பித்தன. ஆனால், இவர் அதையெல்லாம் மறுத்ததோடு, எனது தொழில் நடிப்பது மட்டுமே என்று தெளிவாக தெரிவித்துவிட்டார்.
இது ஒருபுறம் சிறப்பாக நடைபெறுகையில் நடிகர் மகேஷ்பாபு சமூக சேவைகளையும் அவ்வப்போது செய்து வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஹீல் எ சைல்ட் ஃபவுண்டேஷனுடன் எனும் சேவை மையத்தோடு இணைந்து சிறு குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை செய்வதற்கான செலவை நன்கொடையாக வழங்கி வருகிறார்.

இதுவரையில் மகேஷ் பாபு அளித்த நன்கொடை மூலம் ஆயிரம் சிறு குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அவரின் இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது. இது மிகப்பெரிய சாதனையாகும். அவர் ஏழை மக்களுக்கு உதவிய அந்த சேவை மனப்பான்மை மதிக்கப்பட வேண்டும்.
மறுபக்கம் மகேஷ் பாபு, அணில் ரவிப்புடி இயக்கத்தில் சரிலேரு நீகேவரு படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த அதிரடியுடன் கூடிய குடும்ப படம் மஹா சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











