தெலுங்கு நடிகர் கிருஷ்ணா காலமானார்.. அண்ணன், அம்மாவை தொடர்ந்து அப்பாவையும் இழந்த மகேஷ் பாபு!

ஹைதராபாத்: டோலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகரான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

அண்ணன், அம்மா என சமீபத்தில் தனது குடும்பத்தில் இருவரை இழந்த துயரில் இருந்தே மீள முடியாமல் தவித்து வந்த நடிகர் மகேஷ் பாபுவின் அப்பாவும் உயிரிழந்தது அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காலமானார்

சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காலமானார்

1943ம் ஆண்டு மே 31ம் தேதி ஆந்திராவின் பூரி பாலெம் எனும் இடத்தில் பிறந்தவர் நடிகர் கிருஷ்ணா. 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கிய கிருஷ்ணா மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79. இவர் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக்பஸ்டர்

பிளாக்பஸ்டர்

1965ம் ஆண்டு வெளியான தேனே மனசுலு படத்தின் மூலம் சின்ன ரோலில் அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா. 1971ம் ஆண்டு வெளியான மொசகலுகு மொகடு படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடி தந்தது. பண்டந்தி கபுரம், அல்லூரி சீதாராம ராஜு, தேவுடு சேசின மனசுலு, ராம் ராபர்ட் ரஹீம், சிம்மாசனம் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களை தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு கொடுத்து டோலிவுட் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தை பெற்றவர் கிருஷ்ணா.

மகேஷ் பாபு தந்தை

மகேஷ் பாபு தந்தை

டோலிவுட்டின் தற்போதைய சூப்பர்ஸ்டார் நடிகராக விளங்கும் மகேஷ் பாபுவின் தந்தை தான் கிருஷ்ணா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சினிமாவை தாண்டி அரசியலிலும் அதிக ஆர்வம் செலுத்தி வந்த கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் இணைந்து பெரிய பதவியை வகித்து வந்தார். இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன் உள்ளிட்ட உயரிய விருதுகளை கொடுத்து சிறப்பித்துள்ளது.

அண்ணன், அம்மா, அப்பா

அண்ணன், அம்மா, அப்பா


மகேஷ் பாபுவின் அண்ணன் இந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் உடல் நலக் குறைவு காரணமாக மகேஷ் பாபுவின் அம்மா இந்திரா தேவி காலமானார். இந்நிலையில், ஒரே ஆண்டில் 3வது மரணமாக மகேஷ் பாபு வீட்டில் அவரது அப்பாவும் காலமானது ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

நடிகர் மகேஷ் பாபுவுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் சொல்ல தெலுங்கு திரையுலகமே மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மறைவு செய்தி அறிந்ததுமே அவரது வீட்டுக்கு படையெடுத்து இறுதி அஞ்சலி செய்து வருகின்றனர். நாடு முழுவதும் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மறைவு தெலுங்கு திரையுலகில் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X