ராஜமெளலி படத்துக்காக சிக்ஸ் பேக் வைக்கப் போறாரா மகேஷ் பாபு.. டிரெய்னர் யாரு தெரியுமா?

ஹைதராபாத்: டோலிவுட்டின் டாப் ஹீரோவான மகேஷ் பாபு உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரபல ஜிம் டிரெய்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Vijay எடுத்த துணிச்சலான முடிவு, ரசிகர்களுக்கு இது Shocking Update தான்

ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு அப்படியொரு கட்டுமஸ்தான தேகத்தை வரவழைத்துக் கொடுத்தவர் அந்த டிரெய்னர்.

அதனால், ராஜமெளலி படத்துக்கு ரெடியாகி விட்டாரா மகேஷ் பாபு என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ராஜமெளலி படத்தில் மகேஷ் பாபு

ராஜமெளலி படத்தில் மகேஷ் பாபு

பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் என ராஜமெளலி படத்தில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வரும் நிலையில், அடுத்ததாக டோலிவுட்டின் டாப் நடிகரான மகேஷ் பாபுவும் ராஜமெளலி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். ஆப்பிரிக்கா காட்டில் நடக்கும் டிரெஷர் ஹன்ட் பாணியில் படம் த்ரில்லிங்காகவும் ஃபேண்டஸியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்ஸ்பேக் வைக்கிறாரா மகேஷ் பாபு

சிக்ஸ்பேக் வைக்கிறாரா மகேஷ் பாபு

சர்காரு வாரி பாட்டா நடிகர் மகேஷ் பாபுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரபல ஃபிட்னஸ் டிரெயினரான லாய்ட் ஸ்டீவன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, Let do this என கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் ராஜமெளலி படத்தில் சிக்ஸ்பேக் எல்லாம் வைத்து வேறலெவலில் மகேஷ் பாபு மிரட்டப் போகிறார் என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கொமரம் பீம் ஃபிட்னஸ்

கொமரம் பீம் ஃபிட்னஸ்

நல்லா அமுல் பேபியாக டோலிவுட்டில் நடித்து வந்த ஜூனியர் என்டிஆரை தான்சானியா காட்டில் டார்ஜான் போல ஓட விடுவதற்கு முன்னதாக இயக்குநர் ராஜமெளலி இவரிடம் தான் உடற்பயிற்சி மேற்கொள்ள செய்துள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தின் புலியை துரத்திக் கொண்டு ஓடும் அந்த முதல் காட்சியில் ஏகப்பட்ட கட்ஸ்களுடன் உடம்பை அப்படிக் காட்ட ஜூனியர் என்டிஆருக்கு உதவியது இந்த லாய்ட் ஸ்டீவன்ஸ் தான்.

ரன்வீர் சிங்குக்கு

ரன்வீர் சிங்குக்கு

பாலிவுட்டில் கட்டுமஸ்தான தேகத்துக்கு பெயர் போன ஜான் ஆபிரகாம் மற்றும் நிர்வாணமாக போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் ஃபிட்னஸ் டிரெய்னராக இருந்துள்ளார் இவர். டாப் ஹீரோக்களுக்கு பக்காவாக பாடியை ஷேப் பண்ண உதவி வருகிறார்.

அந்த விஷயத்தில் உறுதி

அந்த விஷயத்தில் உறுதி

பல நூறு கோடி போட்டு படத்தை எடுப்பதற்கு முன்னதாக தனது பட நடிகர்கள் லுக் வைஸ் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் ராஜமெளலி. பாகுபலி படத்தில் பிரபாஸ் மற்றும் ராணாவின் ஃபிட்னஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் ஃபிட்னஸ் தான் திரையில் அவர்களை படு மாஸாக காட்ட உதவுகிறது. மகேஷ் பாபு ராஜமெளலி படத்தில் நடித்தால் புதிய மகேஷ் பாபுவை ரசிகர்கள் நிச்சயம் பார்ப்பது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X