பிக்பாஸ் சீசன் 4ஐ தொகுத்து வழங்க போகும் சூப்பர் ஸ்டார்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. பரபரப்பு தகவல்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 4ஐ தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தில் முதன் முதலாக நடத்தப்பட்டது பிக்பிரதர் நிகழ்ச்சி. இதனை தொடர்ந்து பிரிட்டனின் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமான சேனல் 4 நிறுவனம் உலக பிரபலங்களை வைத்து பிக்பிரதர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது.
பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இந்நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்தியாவிலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.இந்தியில் 2006ஆம் ஆண்டு முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. எண்டமால் நிறுவனம் இந்நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது.

இந்தி பிக்பாஸ்
இந்தியில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 13 சீசன்களை கடந்துள்ளது. இந்தியில் இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கன்னடா மற்றும் பெங்காலி மொழியில் 2013ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 2017ஆம் ஆண்டு முதலும் மராத்தி மற்றும் மலையாளத்தில் 2018ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

முகென் ராவ் வின்னர்
இந்தியில் இதுவரை நடந்து முடிந்துள்ள 13 சீசன்களை முன்னணி நடிகர்கள் பலர் தொகுத்து வழங்கியுள்ளனர். கடைசியாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கினார். தமிழில் கடந்த மூன்று சீசன்களையும் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த சீசனில் மலேசிய பாடகரான முகென் ராவ் டைட்டில் வின்னர் ஆனார்.

தெலுங்கு சூப்பர் ஸடார்?
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகர்ஜுனா, ஜுனியர் என்டிஆர், நடிகர் நானி ஆகியோர் தொகுத்து வழங்கி இருந்தனர். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிகழ்ச்சிக் குழு இன்னும் வெளியிடவில்லை.

ரசிகர்கள் கோரிக்கை
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4ஐ மகேஷ் பாபுதான் தொகுத்து வழங்கவுள்ளார் என்று வெளியாகியிருக்கும் தகவலால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தகவல் உண்மைதானா என்பதை நடிகர் மகேஷ் பாபு அல்லது நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பு உறுதி படுத்தவேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கமல்ஹாசன்?
தமிழில் பிக்பாஸ் 4 சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் பணி, 'இந்தியன் 2' படப்பிடிப்பு என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் இம்முறை பிக்பாஸிலிருந்து விலகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications