மகேஷ் பாபு முழுநீள காமெடி படத்தில் நடிக்க வேண்டும் - ஜெயசுதாவின் ஆசை

சென்னை: மகேஷ் பாபு ஒரு முழு நீள காமெடி படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் நடிகை ஜெயசுதா. அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

டோலிவுட்டில் முன்னணியில் இருக்கும் நடிகர் மகேஷ் பாபு பெரும்பாலும் ஆக்ஷன் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் சார்ந்த படங்களிலேயே நடித்து வருகிறார். அது அவருடைய கம்ஃபோர்ட் ஜோன் ஆக இருக்கலாம் ஆனால் அவருக்குள் இருக்கும் மற்ற சில நல்ல திறமைகளையும் வெளிக்கொண்டு வந்தால் அது சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஜெயா சுதா.

Mahesh Babu is very naughty full-length comedy film: Jayasudha

தெலுங்கு திரையுலகில் அம்மா கதாபாத்திரத்திற்கு மிகவும் பிரபலமானவர் ஜெயா சுதா. படு பிஸியாக இருக்கும் ஜெயசுதா தான் மகேஷ் பாபுவை பற்றி இப்படி ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார். மகேஷ் பாபுவிற்கு நகைச்சுவை உணர்வு மிகவும் அதிகம். அவரை சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக சிரிக்க வைக்கும் காமெடி சென்ஸ் அவரிடம் அதிகமாக
இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Mahesh Babu is very naughty full-length comedy film: Jayasudha

மற்றவர்களின் காமெடியை வேண்டுமானாலும் பெரிதாக ரசிக்காமல்
இருக்கலாம் ஆனால் அவரால் நிச்சயமாக ஒரு காமெடி படத்தில் நடிக்க முடியும். மகேஷ் பாபு ஒரு முழு நீள காமெடி படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் ஜெயசுதா. அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் கூறியுள்ளார்.

நான்கு படங்களில் மகேஷ் பாபுவோடு இணைந்து நடித்திருக்கிறார் ஜெயாசுதா. ஜெயா சுதாவின் ஆசை நிறைவேறுமா ? மகேஷ் பாபு முழு நீள படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X