மகேஷ்பாபுவின் 28வது படம்.. த்ரிவிக்ரமுடன் மீண்டும் கூட்டணி.. மிரட்டலான வீடியோ வெளியீடு!

ஐதராபாத் :நடிகர் மகேஷ்பாபு -கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்த சர்க்காரு வாரி பட்டா கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆனாலும் தெலுங்கின் சூப்பர்ஸ்டாராக போற்றப்படும் மகேஷ்பாபுவின் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் மகேஷ் பாபுவின் 28வது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் மகேஷ்பாபு

நடிகர் மகேஷ்பாபு

நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு படவுலகின் சூப்பர்ஸ்டாராக போற்றப்படுகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான மாஸ் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக மாறியுள்ளன. டோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக இவர் உள்ளார். தொடர்ந்து ரசிகர்களை தன்னுடைய படங்கள் மூலம் கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கி வருகிறார்.

சர்க்காரு வாரி பட்டா படம்

சர்க்காரு வாரி பட்டா படம்

சமீபத்தில் கீர்த்தி சுரேஷுடன் மகேஷ் பாபு இணைந்து நடித்திருந்த சர்க்காரு வாரி பட்டா படம் திரையரங்குகளில் வெளியானது. பரசுராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அவரது ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனாலும் வசூல்மழையை இந்தப் படம் பொழிந்தது.

எஸ்எஸ்எம்பி 28 பட அறிவிப்பு

எஸ்எஸ்எம்பி 28 பட அறிவிப்பு

இந்நிலையில் தற்போது அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கவுள்ள அவரது எஸ்எஸ்எம்பி 28 படத்தின் அறிவுப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டிலேயே வெளியான நிலையில், படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் இந்தப் படம் ட்ராப் ஆனதாக கருதப்பட்டது.

தள்ளிப் போன சூட்டிங்

தள்ளிப் போன சூட்டிங்

படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே திட்டமிடப்பட்டு, இந்த ஆண்டு சம்மர் வெளியீட்டிற்கும் திட்டமிடப்பட்டது. ஆனால் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

தமன் வெளியிட்ட வீடியோ

இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் முதல் முறையாக இணைவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அதிரடி கூட்டணி

மீண்டும் அதிரடி கூட்டணி

மிரட்டலான இந்த வீடியோவில் மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சம்மரில் படம் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக அத்தடு மற்றும் கலேஜா ஆகிய படங்களில் இந்தக் சூப்பர் மாஸ் கூட்டணி இணைந்த நிலையில் தற்போது 3வது முறையாக மகேஷ்பாபுவின் இந்த 28வது படத்தில் இணைகின்றனர்.

சிறப்பான அலா வைகுந்தபுரம்லோ படம்

சிறப்பான அலா வைகுந்தபுரம்லோ படம்

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுரம்லோ படம் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் மகேஷ்பாபுவுடன் த்ரிவிக்ரம் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பாபுவிற்கு யார் ஜோடியாவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X