பிரபல டோலிவுட் ஹீரோவுக்கு ஹீரோயின், வில்லன் ரெடி.. நம்ம தமிழ் நடிகர்கள்தான் நடிக்கிறாங்க!

சென்னை : நடிகர் மகேஷ்பாபு சர்க்காரு வாரிப் பட்டா படத்திற்கு பிறகு தனது அடுத்தப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படத்தை த்ரிவிக்ரம் இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவரது தயாரிப்பில் தற்போது மேஜர் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபு டோலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இதன்மூலம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

சர்க்காரு வாரிப் பட்டா படம்

சர்க்காரு வாரிப் பட்டா படம்

தொடர்ந்து சிறப்பான ஆக்ஷன் மற்றும் காமெடி படங்களை இவர் தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் பரசுராம் இயக்கியிருந்த சர்க்காரு வாரிப் பட்டா படம் திரையரங்குகளில் ரிலீசானது. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளது. 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தனது அடுத்தப் படத்தில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார் மகேஷ் பாபு. அடுத்ததாக த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் நடிக்கவுள்ளார்.

ஜோடியாகும் பிரியங்கா மோகன்?

ஜோடியாகும் பிரியங்கா மோகன்?

இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வில் இயக்குநர் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகவுள்ளார் பிரியங்கா மோகன். தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்தப் படங்களில் நடித்துள்ள அவர், அடுத்ததாக தலைவர் 169 படத்திலும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வில்லனாகும் விஜய் சேதுபதி?

வில்லனாகும் விஜய் சேதுபதி?

இதனிடையே, தற்போது அவர் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் வில்லன் அவதாரம்

மீண்டும் வில்லன் அவதாரம்

அடுத்தடுத்து, ரஜினி, விஜய், கமல் என வில்லனாக நடித்து மிரட்டிய விஜய் சேதுபதி தற்போது மகேஷ் பாபுவுடன் மோதவுள்ளார். முன்னதாக டோலிவுட்டில் இவர் உப்பென்னா படத்திலும் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மகேஷ் பாபுவிற்கு வில்லனாக நடித்தால் இவர் டோலிவுட்டிலும் சிறப்பாக கவனிக்கப்படுவார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தத் தகவலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக வெயிட்டிங். இந்த வில்லன் கேரக்டர் ஹீரோவிற்கு சமமானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், விரைவில், நாயகி மற்றும் வில்லன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

வசூலை குவிக்கும் மேஜர்

வசூலை குவிக்கும் மேஜர்

இதனிடையே த்ரிவிக்ரம் படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கத்திலும் மகேஷ் பாபு இணையவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகேஷ் பாபு தயாரிப்பில் ரிலீசாகியுள்ள மேஜர் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருவது அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X