ஹூட்ஹூட் நிவாரண நிதி: மகேஷ்பாபு ரூ.25 லட்சம், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.20 லட்சம் நன்கொடை
ஹைதராபாத்: ஹூட்ஹூட் புயல் நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், ராம்சரண் தேஜா ஆகியோர் நன்கொடை வழங்கியுள்ளனர்.
வங்கக் கடலில் நிலை கொண்ட ஹூட்ஹூட் புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸா மாநிலம் கோபால்பூர் இடையே ஞாயிற்றுக்கிழமை கரையை கடந்தது. புயல் விசாகப்பட்டினத்தில் கோரத் தாண்டவம் ஆடியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் நிவாரண நிதிக்கு தெலுங்கு திரையுலகினர் தாராளமாக நன்கொடை வழங்கியுள்ளனர்.

மகேஷ்பாபு
தெலுங்கு திரையுலகின் பிரின்ஸ் மகேஷ் பாபு புயல் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர்.
ஜூனியர் என்.டி.ஆர். ஹூட்ஹூட் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன் விசாகப்பட்டினத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.20 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

ராம்சரண்
சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சமும், சினிமா எழுத்தாளர் கோனா வெங்கட் ரூ.1 லட்சமும் நன்கொடை அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











