'புகழைக் கெடுக்க சதி' வீடியோ வெளியிட்டு விளாசிய இளம் நடிகர்..அதிரடியாக ஆதரவு தெரிவித்த டாப் ஹீரோ!
சென்னை: தன் புகழை கெடுக்கும் விதமாக, சிலர் செயல்படுவதாக இளம் ஹீரோ விளாசியுள்ளார். அவருக்கு பிரபல ஹீரோ மகேஷ்பாபு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்தவர், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான இவர், கடைசியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

சம்பளத்தில் பாதி
இதில் 4 ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்த படம் சரியாக ஓடவில்லை. இப்போது புரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இதற்கு ஃபைட்டர் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர். இதை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கின்றனர்.

ரம்யா கிருஷ்ணன்
இந்தப் படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழிலும் உருவாகிறது. இந்தியில் கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தா தயாரிக்கின்றனர். அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். இவர், இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள். இதில் பாக்சராக விஜய் தேவரகொண்டா நடிப்பதாகக் கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன் அவர் அம்மாவாக நடிக்கிறார்.

இதுதான் ஜர்னலிசமா?
இந்நிலையில் கொரோனா காரணமாக நடிகர், நடிகைகள் வீடுகளிள் இருக்கின்றனர். சில நடிகர், நடிகைகள், நிதி திரட்டி உதவி வருகின்றனர். நடிகர் விஜய் தேவரகொண்டா நிவாரண நிதி அளிக்கவில்லை என்று புகார் கூறப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் 1.30 கோடி நிவாரண நிதியை அறிவித்த விஜய தேவரகொண்டா, உதவி வேண்டுவோர் தனது அறக்கட்டளை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

நிவாரண நிதி
இந்நிலையில் சில நான்கைந்து தெலுங்கு இணைய இதழ்கள், தனது புகழை கெடுக்கும் விதமாக எழுதி வருவதாக விஜய தேவரகொண்டா வீடியோவில் விளாசியுள்ளார். தனது சாரிட்டி குறித்து அவை தவறாக எழுதியுள்ளதாகக் கூறியுள்ள விஜய் தேவரகொண்டா, இப்படி எழுதுவதான் ஜர்னலிசமா? என்று கேட்டுள்ளார். மேலும் தன்புகழை கெடுக்கும் விதமாக ஆதாரமில்லாத செய்திகளை எழுதி வருவதாகவும் அவர் கோபமாகக் கூறியுள்ளார்.

மகேஷ்பாபு
இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் வீடியோ பதிவுக்கு சில தெலுங்கு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரபல ஹீரொஒ மகேஷ்பாபு கூறும்போது, முகம் தெரியாத சிலர், பணத்துக்காக எதையும் செய்வார்கள், புகழை கெடுப்பார்கள். இதுபோன்ற போலியான வெப்சைட்களுக்கு எதிராக நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இயக்குனர் கொரட்டலா சிவா, வம்சி படிபள்ளி உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











