Mahesh Babu: ஸ்க்ரிப்ட் சரி இல்ல..? பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை திருப்பி அனுப்பிய சூப்பர் ஸ்டார்!

சென்னை: தமிழ்த் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். ஜென்டில்மேன் முதல் விரைவில் வெளியாகவுள்ள இந்தியன் 2 வரை ஷங்கரின் படங்கள் அனைத்தும் மேக்கிங்கிற்காகவே எதிர்பார்க்க வைத்துவிடும். இந்நிலையில் ஷங்கர் சொன்ன இரண்டு கதைகள் பிடிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர்.

ஷங்கரை திருப்பி அனுப்பிய சூப்பர் ஸ்டார்: 1993ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. முதல் படத்திலேயே இயக்குநராக சக்சஸ் செய்த ஷங்கர், அடுத்தடுத்து இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியில் நாயக், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0 போன்ற படங்கள் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ளன.

 Mahesh Babu: Mahesh Babu Two Times Rejected Director Shankar Scripts

இந்தாண்டு அவர் இயக்கிய இந்தியன் 2, கேம் சேஞ்சர் என இரண்டு படங்கள் ரிலீஸாக உள்ளன. இதில் கேம் சேஞ்சர் திரைப்படம் தெலுங்கில் உருவாகியுள்ளது. டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் தான் ஷங்கரின் முதல் தெலுங்குப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு முன்னதாகவே தெலுங்கில் படம் இயக்க முயற்சி செய்துள்ளார் ஷங்கர்.

ஷங்கர் இயக்கத்தில் நடிக்க கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல முன்னணி ஹீரோக்கள் ரெடியாக உள்ளனர். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கூட தனக்கு ஷங்கர் இயக்கத்தில் ஆசை இருந்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார். ஆனால் ஷங்கர் இரண்டு முறை மகேஷ் பாபுவை சந்தித்து கதை கூறியுள்ளாராம். அந்த இரண்டு முறையும் ஷங்கரின் ஸ்க்ரிப்ட்டை ரிஜெக்ட் செய்துள்ளார் மகேஷ் பாபு.

அதற்கான காரணம் பற்றி முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், ஷங்கர் சொன்ன கதையில் மகேஷ் பாபுவுக்கு திருப்தி இல்லை என்றே சொல்லப்படுகிறது. தற்போதும் கூட விஜய்யின் கடைசி படத்தை ஷங்கர் இயக்கலாம் என ஒரு பேச்சு கோலிவுட்டில் வலம் வருவதை பார்க்க முடிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், தளபதி விஜய், விக்ரம், ராம் சரண் போன்ற சூப்பர் ஹீரோக்களை இயக்கிய ஷங்கருக்கு மகேஷ் பாபுவுடன் இணைய முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

டோலிவுட் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான குண்டூர் காரம் கமர்சியலாக ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் மகேஷ்பாபு. இதுவரை 28 படங்களில் மட்டுமே நடித்துள்ள மகேஷ் பாபுவுக்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனாலும் அதிக டைம் எடுத்து குறிப்பிட்ட இயக்குநர்களுடன் மட்டும் தான் இணைந்து வருகிறார் மகேஷ் பாபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X