ராஜமௌலியின் வாரணாசி.. மகேஷ் பாபுவை இதற்கு மேல் யாரும் கலாய்க்க முடியாது.. ப்ளூ சட்டை மாறன் மொரட்டு அடி

சென்னை: ராஜமௌலியும், மகேஷ் பாபுவும் இணையும் படத்துக்கு வாரணாசி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் என பலர் நடிக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறதாம். நேற்று இப்படத்துடைய டைட்டில் டீசர் வெளியானது. அப்போது நடந்த ஒரு விஷயத்தை வைத்து மகேஷ் பாபுவை மொரட்டுத்தனமாக கலாய்த்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

ராஜமௌலி கடைசியாக இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் கருத்தியல் ரீதியாக ஒருதரப்பினருக்கு பிடிக்காமல் போனாலும் ஹிட்டாகிவிட்டது. உலகம் முழுவதும் அப்படம் 1,400 கோடி ரூபாய்வரை வசூலை அள்ளியதாக அப்போதைக்கு பேசப்பட்டது. அந்த பிரமாண்ட வெற்றி ராஜமௌலியை மேற்கொண்டு யாரும் தொட முடியாத உயரத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. அவர்தான் இப்போதைக்கு இந்தியாவின் நம்பர் 1 இயக்குநராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

அடுத்த படம்: ஒரு பிரமாண்ட வெற்றி கொடுத்த பிறகு; அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை ஒட்டுமொத்த திரைத்துறையுமே உற்று நோக்கும். அப்படித்தான் இவரையும் கவனித்தார்கள். அபப்டி கவனித்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தெலுங்கு ஸ்டார்களில் ஒருவரான மகேஷ் பாபுவுடன் இணையப்போவதாக அறிவிப்பு வெளியானது. பிரபாஸ், ராம்சரண் போன்றோருக்கு மெகா ஹிட்டை கொடுத்தது போல் இவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற ஆவல் மகேஷின் ரசிகர்களுக்கு இருக்கிறது.

Mahesh Babu Mocked by Blue Sattai Maran After Varanasi Title Teaser Release
Photo Credit:

நேற்று வெளியான டைட்டில்: இப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிக ஹைப்பை பெற்றிருக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் நேற்றூ வாரணாசியில் நடந்த பிரமாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. படத்துக்கு வாரணாசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவர்கள் இணையும் படம் ராமாயணத்தையோ அல்லது மகாபாரதத்தையோ தழுவி எடுக்கப்படும் படமாகத்தான் இருக்கும் என்ற பேச்சு நேற்று வெளியான டைட்டில் டீசர் மூலம் உண்மையாகிவிட்டது.

என்ன மாதிரியான படம்: அதில் இடம்பெற்ற விஷயங்கள் எல்லாம் அதைத்தான் உணர்த்துகின்றன. இது சைன்ஸ் ஃபிக்‌ஷன், டைம் ட்ராவல் உள்ளிட்டவைகளை புராண காலத்தோடு தொடர்புப்படுத்தி எடுக்கப்படும் படமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க டைட்டில் டீசரில் காளை மாட்டின் மேல் மகேஷ் பாபு அமர்ந்து வருவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. இதே மாதிரியான ஒரு காட்சி கமல்ஹாசன் நடிக்கவிருந்த மருதநாயகம் படத்திலும் இடம்பெற்றிருந்தது.

கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: எனவே இரண்டையும் கம்ப்பேர் செய்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பேச ஆரம்பித்தது மட்டுமின்றி எக்ஸ்பிரஷெனே வராதா என்று மகேஷை கிண்டல் செய்யவும் ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், நேற்றைய விழாவில் பொம்மை காளை மாட்டில் மகேஷ் பாபு அமர்ந்திருந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, 'மாடு, மகேஷ் பாபு ரெண்டுமே பொம்மை நினைச்சவன் மட்டும் கைய தூக்குங்க' என்று பங்கமாக கலாய்த்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X