முதலில் தனுஷ்.. அடுத்து கார்த்தி.. மகேஷ் பாபுவின் டார்கெட்!

சென்னை: தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கைதி திரைப்படத்தை வெகுவாக பாராட்டியிருக்கிறார் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு.

தனது ட்விட்டர் பக்கத்தில் கைதி திரைப்படத்தை பாராட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில், கைதி ஒரு புதிய சினிமா. பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை, பாடல்களே இல்லாமல் புதிய சினிமா... சினிமாவில் வரவேற்கத்த மாற்றம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

Mahesh babu praises kaithi movie

தமிழ் சினிமாவின் விதிகளை தாண்டி கதையை மட்டும் மையமாக வைத்து அவ்வப்போது படங்கள் வெளியாவதுண்டு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், தினா உள்ளிட்ட பலர் நடிப்பில் அப்படி வெளியாகியுள்ள படம்தான் 'கைதி'.

பாடல், கதாநாயகி இல்லாமல், முழுக்க முழுக்க இரவில் மட்டுமே எடுக்கப்பட்ட கைதி, திரைப்படம், பிகில் படத்தோடு வெளியிடப்பட்டாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கமர்ஷியல் சினிமாவுக்கென எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல், ஸ்டார் நடிகரின் படத்தோடு வெளியானாலும், கைதி படத்தை ரசிகர்கள் அங்கீகரித்துள்ளனர். இப்படத்தை வரவேற்கத்தக்க மாற்றம் என மகேஷ் பாபு குறிப்பிட்டதில் ஆச்சர்யம் இல்லை.

Mahesh babu praises kaithi movie
மகேஷ் பாபுவின் பாராட்டிற்கு படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, கார்த்தி ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். மகேஷ் பாபுவும், கார்த்தியும் பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்கள் என்பதால், இருவரும் இணைந்திருக்கும்படியான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு, 'அசுரன்' படத்தையும் பாராட்டி மகேஷ் பாபு ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 'அசுரன் – அசலான, ஆழமான, உண்மையான ஒரு படம். மிகச்சிறந்த சினிமா. தனுஷ், வெற்றிமாறன், ஜி.வி. பிரகாஷ், மற்றும் ஒட்டுமொத்த அசுரன் குழுவுக்கும் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார். அசுரனும் கமர்ஷியல் சினிமாவுக்கான எல்லைகளை உடைத்து வெளியான படம். கல்யாண வயதுடைய மகனின் தந்தையாக நடித்து அசத்தியிருந்தார் தனுஷ்.

Mahesh babu praises kaithi movie
வேறு மொழிப் படமாக இருந்தாலும், நல்ல படங்களுக்கு மகேஷ் பாபு தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருவதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X