ஓ மை கடவுளே படம் செம சூப்பர்.. பாராட்டிய தென்னிந்திய சூப்பர்ஸ்டார்.. உற்சாகத்தில் அசோக் செல்வன்!

சென்னை: ஓ மை கடவுளே படம் சூப்பர் என்றும், அதில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் அருமை என தென்னிந்திய சூப்பர்ஸ்டார் மனதார பாராட்டி இருக்கிறார்.

Recommended Video

Samantha is Not PRETTY at all • Pooja Hedge • Oh Baby • Nandhini Naidu

அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே.

காதலர் தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான ஓ மை கடவுளே, தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய படங்களில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது.

லாக்டவுனுக்கு முன்னதாக

லாக்டவுனுக்கு முன்னதாக

மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதமாவது திறக்குமா? என்ற பில்லியன் டாலர் கேள்வியுடன் மூடப்பட்டு கிடக்கின்றன. பொங்கலை முன்னிட்டு ஜனவரியில் வெளியான தமிழ் படங்கள் வெற்றியை பெற தவறிய நிலையில், பிப்ரவரியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான ஓ மை கடவுளே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

மேஜிக் டிக்கெட்

மேஜிக் டிக்கெட்

இந்த படத்தில் கடவுளாக விஜய்சேதுபதி நடித்திருந்தார். அவர் தரும் மேஜிக் டிக்கெட்டால் அசோக் செல்வன் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ நினைக்கிறார். ஆனால், விவாகரத்து வரை போய் நிற்கும் தனது மனைவியின் உண்மையான காதலை புரிந்து கொள்ளும் அவர், விவாகரத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு மனைவியுடன் ஒன்று சேர்வது தான் இந்த படத்தின் கதை.

பிரபலங்கள் பாராட்டு

பிரபலங்கள் பாராட்டு

படம் வெளியான போதே இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு பல பிரபலங்களும் ரசிகர்களும் படம் சூப்பர் என பாராட்டி தள்ளினர். லாக்டவுனுக்கு பிறகு ஆன்லைனில் வெளியான இந்த படத்தை மீண்டும் ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே பார்த்து, காதல் மற்றும் ஃபேண்டஸி கதையை நல்லா மிக்ஸ் பண்ணி சூப்பரா இயக்குநர் இயக்கி இருக்கிறார் என பாராட்டி வருகின்றனர்.

தென்னிந்திய சூப்பர்ஸ்டார்

தென்னிந்திய சூப்பர்ஸ்டார்

இந்நிலையில், ஓ மை கடவுளே படக்குழு மொத்தமும் மீண்டும் ஒரு முறை ஓ மை கடவுளே என்று சொல்லும் அளவுக்கு ஒரு சூப்பரான விஷயம் நடந்திருக்கிறது. டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில், ஓ மை கடவுளே சூப்பர் என்றும், படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படியாக நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இயக்குநர் அஷ்வத் கலக்கிட்டீங்க, அசோக் செல்வன் நீங்க நேச்சுரலான நடிகர் என பாராட்டி தள்ளி உள்ளார்.

உற்சாகத்தில் ஆடுகிறேன்

உற்சாகத்தில் ஆடுகிறேன்

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் இந்த எதிர்பாராத பாராட்டை பார்த்த நடிகர் அசோக் செல்வன், நிச்சயமாக இது தான் எனது ஓ மை கடவுளே தருணம். உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் நான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், உங்களின் பாராட்டுக்களை பார்த்து, உற்சாகத்தில் இங்கு நான் ஆடிக் கொண்டிருக்கிறேன். ரொம்ப நன்றி சார் என பதிவிட்டுள்ளார். மற்ற படக்குழுவினரும் மகேஷ் பாபுவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X